186 பதக்கங்களுடன் நாடு திரும்பினர் இலங்கை வீரர்கள்!

இந்தியாவின் கௌகாத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விட்டு, விசேட விமானம் மூலம் நாடு திரும்பிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களை பெற்றோலிய மற்றும் கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜகருணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள்...

ஷேன் வார்ன் : சச்சினிடம் அடி.. அனகோண்டா பாம்பிடம் கடி..

டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில், அனகோண்டா வகை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, 'ஐயம் ஏ செலப்ரட்டி.. கெட் மீ அவுட் ஆப் ஹியர்' என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியொன்றில்...
Ad Widget

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம் இதோ!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண மற்றும் ஆசியக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லசித் மலிங்க (அணித் தலைவர்) அஞ்சேலோ மத்தியுஸ் (துணைத் தலைவர்) தினேஷ் சந்திமால் திலகரத்ன டில்ஷான் நிரோஷன் டிக்வெல்ல ஷேகான் ஜெயசூரிய சாமர ஹப்புகேதர மிலிந்த சிறிவர்த்தன டசுன் சானக்க நுவான் குலசேகர துஸ்மந்த சமீரா திஸர...

இலங்கை வீரர்களுக்கு சிரமம் – இந்திய அதிகாரிகளே நேரடி பொறுப்பு

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வட மாகாண அமைச்சு உதவவில்லை! சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர் ஆதங்கம்

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...

தனக்கு சிவப்பு அட்டைகாட்டிய நடுவரை சுட்டு கொன்ற கால்பந்து வீரர்

அர்ஜென்டினா நாட்டில் உள்ள கேம்போடிம் லா பிரிபேரா மாகா ணத்தில் உள்ள கார்டோபாவில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். ஆத்திரம் அடைந்த அந்த...

தெற்காசியாவின் வேகமான மனிதர், மங்கை இலங்கையில்

இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100m ஓட்டத்தில் இலங்கை வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் தெற்காசியாவில் மிகவும் வேகமான மனிதர் மற்றும் மங்கை எனும் பெருமையை இலங்கையின் ஹிமாஷா இஷான் மற்றும் ருமேஷிகா ரத்நாயக்க ஆகியோர் பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி மற்றும் மேகாலயா மாநிலத் தலைநகர்களின் 12ஆவது...

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் மே.தீவுகள் வசம்

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தியாவை அந்த அணி 145 ஓட்டங்களில் சுருட்டியது. இதனால் 146...

இலங்கையை இலகுவாக வென்றது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி, தோல்வியைத் தழுவியுள்ளதோடு தொடரையும் பறிகொடுத்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்தநிலையில், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...

இரட்டைக் குழந்தைகளுடன் சென்று தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனை!

அண்மையில் பிரசவித்த தனது இரட்டைக் குழந்தைகளுடன் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு சென்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இலங்கை வீராங்கனை. உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனைதெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில்...

யுவராஜ்சிங் அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு – டோணி

இரண்டாவது டி20 போட்டியில், இலங்கையை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. இப்போட்டியில், யுவராஜ் களம் இறங்க வேண்டிய நேரத்தில் கேப்டன் டோணி பேட் செய்ய சென்றது யூவி ரசிகர்களை கடுப்புக்குள்ளாக்கியுள்ளது. டோணி களமிறங்கியதுமே ரெய்னா விக்கெட் வீழ்ந்ததால் யூவி களமிறங்கினார். ஆனால் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கம் அவசரத்தில் எல்லைக்கோடு...

திஸர பெரேரா சாதனை; இந்திய அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய...

இந்தியா–இலங்கை மோதல் இன்று

ராஞ்சியில் இன்றிரவு நடக்கும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில்...

இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வினேத் சில்வா இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் அவர் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டில்சானுக்கு கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை!

இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு, கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டில்ஷான் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும், அவர்...

அதிக தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த நீச்சல் வீரர்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று தனது 7வது தங்கப் பதக்கத்தை மெத்திவ் அபேசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி, இலங்கைக்காக அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் என்ற, பெருமையை அவர் தனதாக்கியுள்ளார். முன்னதாக ஜூலியன் போலிங் (Julian Bolling) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

T20 உலக கோப்பை: பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல தயக்கம்?

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி பங்கேற்காது என தெரியவந்துள்ளது. ஆறாவது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில்...

சாதித்தது இலங்கை அணி ; இந்தியாவிற்கு எதிராக இலகு வெற்றி

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் இலங்கை 5விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றுள்­ளது. [caption id="attachment_57868" align="aligncenter" width="900"] Milinda Siriwardana of Sri Lanka celebrates the win with Seekkuge Prasanna of Sri Lanka during the first Paytm T20 Trophy International match between India and Sri...

இலங்கை தோல்வி!! : இறுதிப் போட்டியில் இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் அயர்லாந்து, நியூஸிலாந்து, நேபாள அணிகளையும், காலிறுதியில் நமீபியாவையும் தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி...

தொடரை வென்றதால் 2-வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்தது. நேற்றய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் இரு அணிகளும்...
Loading posts...

All posts loaded

No more posts