கிரிக்கெட் தேர்தலில் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் அர்ஜூன முறைப்பாடு

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன...

ஐ.பி.எல் : அணிகளும் வீரர்களும் முழு விவரம் !

9 - வது ஐ.பி.எல். சீசன் ஏலம் நடைபெற்றது. இதில் ஷேன் வாட்சன், பவன் நேகி, யுவராஜ் சிங், கிறிஸ் மோரிஸ், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இந்த ஐ.பி.எல்...
Ad Widget

ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே ஏலம் போன பரிதாபம்!

9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார். மற்ற 15 பேரையும் சீந்தக் கூட ஆள் இல்லை. திசரா பெரைரா மட்டுமே ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்ற பிரபலங்கள் உள்ளிட்ட யாரையும் எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இது...

வீழ்ந்தது இங்கிலாந்து – அரையிறுதியில் இலங்கை

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை ஆறு விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ள இலங்கை, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 184...

தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்

இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் (freestyle swimming)முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில்...

பிரிமியர் லீக் வீரர்கள் ஏலம் துவங்கியது

இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் துவங்கியது . பெங்களூருவில் நடக்கும் ஏலத்தில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் . தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக ஆஸி., வீரர் ஷேன் வாட்சனை - ரூ. 9.50 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.மேலும் ஏலம் போன வீரர்கள் விவரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்த கெவின் பீட்டர்சனை...

12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்!

12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று (05) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இன்று ஆரம்பமாகும் இப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். 1984 ஆம்...

இலங்கை அணிக்கு மலிங்க தலைவர்!

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த இரு போட்டித் தொடருக்கும் லசித் மலிங்க தலைமைப் பதவி வகிக்கும் அதேவேளை, உப தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார் என கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள் ஐவருக்கு உபாதை

இந்தியாவுடனான 20க்கு 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் உபதைக்குள்ளாகியுள்ளனர். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அணியில் தெரிவாகியுள்ள வீரர்கள் வருமாறு,...

முதலிடம் பிடித்த விராட் கோலி!

ஐ.சி.சி., 20 ஓவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் முறையே 90* ஓட்டங்கள், 59* ஓட்டங்கள், 50 ஓட்டங்கள் வீதம் எடுத்து அவுஸ்திரேலியாவை விழிபிதுங்க...

டி20 கிரிக்கெட் : அடிலெய்டில் ஒரு அடாவடி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது டிவி சேனல் ஒன்றுடன் பேசிக்கொண்டே பேட்டிங் செய்ததுதான், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆனதற்கு காரணம் என்று சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி செவ்வாய்க்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா கோஹ்லியின் 90 ரன்கள் உதவியோடு, 188...

அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. [caption id="attachment_57240" align="aligncenter" width="900"] India's Yuvraj Singh, center left, celebrates catching out Australia's Chris Lynn with his teammates during their T20 International cricket match in...

யாழில் தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம்!

தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 8.45 மணியளவில் உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தேகாரோக்கியத்தினை மேம்படுத்தல் தொடர்பில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் உரையாற்றப்பட்டதனைத் தொடர்ந்து பழைய பூங்காவில் மாவட்ட செயலக...

யாழில் ரணதுங்காவின் பயிற்சி முகாம்

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் கிரிக்கெட் பயிற்சி முகாம் மற்றும் பட்டறை யாழ். மத்திய கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய விளையாட்டு சுதந்திர விளையாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆளுமை விருத்திக்கான அறிவுரைகள், விளையாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்தல் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த...

இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்திய இளம் வீரர் பும்ரா தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். முந்தைய போட்டிகளைப் போலவே அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்தியது....

இந்திய அணிக்கு தொடர் தோல்வி

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கன்பெராவில் இடம்பெற்றது. இப்...

மத்தியூஸிடம் 5 மணி நேரம் விசாரணை!

ஆட்டநிர்ணய சதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரங்கன ஹேரத் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரிடம் ஆட்டநிர்ணய தரகர்கள் நெருங்கியமை தொடர்பிலேயே தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக...

ஊடகங்களின் நடவடிக்கை குறித்து அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி

சில ஊடகங்களின் நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். சில ஊடகங்கள் வேண்டுமென்றே அணியின் வீரர்கள் மீது சேறு பூசியிருந்தன. ஆட்ட நிர்ணய சதி குறித்து நடைபெறும் விசாரணைகளை பயன்படுத்தி வீரர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். எனினும் விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டுத்துறை அமைச்சர், பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

கிரிஸ் கெய்ல் புதிய சாதனை

பன்னிரெண்டு பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார். பிக் பாஷ் டி20 லீக் தொடரின் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய கெய்ல், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார். இதன்மூலம்...

திஸர பெரேரா ஓய்வு பெற முடிவு

இலங்கை அணி வீரர் திஸர பெரேரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். 26 வயதேயான இவர் இதுவரை இலங்கை சார்பில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts