பொது நலன் வழக்கு மூலம் என்னுடைய தலைமையை பற்றி முடிவு செய்யலாம்: தோனியின் கிண்டல்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களடன்...

இலங்கை அணியின் தலைவருக்கு அழைப்பாணை

இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸை நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை...
Ad Widget

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி...

ரி20 உத்தியோகப்பூர்வ கிண்ணம் நாளை இலங்கைக்கு

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 08ஆம் திகதி 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கும் வரவுள்ளது. உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை (16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்தப்படும். இக்கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது....

இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டு

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட்...

சுழற்பந்து வீச்சாளர்கள் சொதப்பி விட்டனர் – டோனி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடைபெற்றது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறும் போது, ‘ஆட்டத்தின் இடைவேளையில், எங்களது வீரர்களுடன் வியூகம் குறித்து ஆலோசித்தேன். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுக்காவிட்டால், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று கூறினேன். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு...

ரோஹித் சர்மா 171*, கோலி 91; ஆஸிக்கு 310 ரன்கள் இலக்கு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 309 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 171 ரன்கள் எடுத்தார். டாஸ் வென்ற இந்திய...

ஒன்வொன்றாக வெளியாகும் கிறிஸ் கெய்லின் லீலைகள் : ஆஸ்திரேலிய பெண்ணிடமும் சேட்டை

ஆஸ்திரேலிய பெண்ணிடம் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில், டிவி வர்ணனையாளரிடம் மது குடிக்க வருமாரு அழைப்புவிடுத்து சர்ச்சையில் சிக்கி அபாரதத்திற்கு உள்ளானார். இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கெயில் பற்றி...

323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் – கிரிக்கெட் உலகின் புதிய சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே இந்த இலக்கை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர்...

பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை தண்ணி அடிக்க அழைத்த கெயில்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில். அதுமட்டுமா உங்கள் கண்கள் ரொம்ப அழகு என்று எசக்கு பிசக்காக பேட்டி அளித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று...

தொடரை வென்றது நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...

இங்கிலாந்தின் 22 வயது கிரிக்கெட் வீரர் மர்ம சாவு

இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை எடுத்துள்ளார். இதன்படி 32 வாக்குகள் வித்தியாசத்தில் திலங்க சுமதிபால வெற்றியீட்டியுள்ளார். திலங்க சுமதிபால இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்...

இலங்கை – நியூஸிலாந்து 4வது போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது. இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும்...

குசல், ரங்­கன ஹேரத்துடன் ஆட்ட நிர்­ணய முக­வர்­களை கைது செய்­யவும்

தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்து உட்­கொண்ட குற்­றச்­சாட்டின் பேரில் ஆரம்ப துடுப்­பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் முன்­னணி சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகி­யோரை ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­ப­டுத்த முயன்றவர்­களை கைது செய்து சதி­திட்ட பின்­னணி குறித்து வெளிப்­ப­டுத்­து­மாறு நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு முறை­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விளையாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் இந்த முறைப்­பாடு...

தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் !அர்­ஜுன ரண­துங்க

நியூஸி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்கட் போட்­டி­களில் இலங்கை அணியின் தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க, கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக நாம் ஒரு திற­மை­யான அணியை உரு­வாக்­கவில்­லை­யெ­னவும் குற்றம் சாட்­டினார்.. நியூஸி­லாந்­துக்கு சென்­றுள்ள இலங்கை கிரிக்கட் அணி அங்கு விளை­யா­டிய போட்­டிகளில்...

இருபதுக்கு20 போட்டியின் அணித்தலைவராக தினேஷ் சந்திமால்

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் இருபதுக்கு20 போட்டியின் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார். உபாதைக்குள்ளாகி இருக்கின்ற லசித் மாலிங்கவிற்கு பதிலாகவே தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படவுள்ளதாகவும் மேலும், தனுஷ்க குணதிலக மற்றும் சுரங்க லக்மாலை இலங்கை இருபதுக்கு20 கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

117 ரன்னில் சுருண்டது மிகவும் மோசமான நாள்: இலங்கை அணியின் பயிற்சியாளர் காட்டம்

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 27.4 ஓவர்களை மட்டும் சந்தித்து 117 ரன்களில் சுருண்டது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8.2 ஓவரிலேயே 118 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து...

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து அபார வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக குலசேகர 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 33 ஓட்டங்களுக்கு...

பெங்கால் வீரர் தலையை தாக்கிய பந்து!

கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பதுண்டு. ஆனால், சில நேரங்களில் பீல்டிங் செய்யும்போதும் பேட்டிங் செய்யும்போதும் பந்து தலையை தாக்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில், தலையை பந்து தாக்கிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் இப்போது நடந்துள்ளது. மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் கொண்ட லீக் தொடர்...
Loading posts...

All posts loaded

No more posts