அமெரிக்க உதைபந்தாட்ட அணிக்கு யாழிலிருந்து நால்வர் தெரிவு!

இலங்கைக்கான அமெரிக்க தேசிய உதைபந்தாட்ட அணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் முறையே யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.தினோஜன், வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ். கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எச்.எம்.டி.டி. நாரண்பணாவ, யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரசாத்குமார்ஆகியோரே தெரிவாகியுள்ளனர். கடந்த...

குஷல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள் தடை

இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்துப் பாவனை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று உத்தியோக பூர்வமாக இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Ad Widget

மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன்

இலங்கை கிரிக்கெட் விளையாட்டு சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ்...

ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர் லசித் மாலிங்க பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாலிங்க கலந்து கொள்கிறார். எனினும் அந்த அணியிலுள்ள அவர் தவிர்த்து ஏனைய 26 வீரர்கள் நேற்று மும்பையிலுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மாலிங்க தான் கலந்து கொள்வது குறித்து...

இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா

இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி...

இலங்கையின் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்

உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில்,...

ஐ.சி.சி உலக லெவன் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு

ஐ.சி.சி உலக லெவன் டி 20 போட்டித் தொடர் அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஜேசன் ராய் (இங்கிலாந்து), குவிண் டன் டி காக் (தென் ஆப்ரிக்கா, விக்கெட் கீப்பர்), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரே ரஸ்ஸல்...

ஐபிஎல் தொடக்க விழாவில் கேத்ரினா கைப் நடனம்

ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசன் தொடக்க விழாவில் பிரபல நடிகை கேத்ரினா கைப், நடிகர் ரன்வீர் சிங் உள்பட நட்சத்திர பட்டாளம் பங்கேற்கிறது. மும்பை, ‘நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் நாளை மறுநாள் மாலை நடைபெற உள்ள பிரமாண்டமான தொடக்க விழாவில், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாப்...

கவாஸ்கரை நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம்...

பெண்கள் உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக ‘சாம்பியன்’ (Highlights இணைப்பு)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை தனதாக்கி வரலாறு படைத்துள்ளது. 5–வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று பிற்பகல் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில்...

வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’ (Highlights இணைப்பு)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும்,...

தோனி ஒருவேளை ‘கத்தி’ படம் பார்த்திருப்பாரோ?

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் 10 நிமிடம் தொடர்ந்து பேசுவது ரசிகர்களின் பேவரைட்டாக இருந்துவருகிறது. அதில் விஜய் மீடியாவுடன் பேசிகொண்டிருக்கும் போது ஒருவர் கேள்விக்கு கோபமான விஜய், அவரை "இங்கே வாங்க சார்..! நீங்க தான் சொன்னீங்களா? கடைசியா எப்போ ஒரு செடியை நட்டிருபீங்க?" என கேட்பார். இதேபோல...

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமைத்துவத்தை தான் ஏற்க தயார்! அர்ஜுண ரணதுங்க

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை கலைத்து இடைகால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்குமாறு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சிறந்த தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக...

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சமி பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின்(89 ரன்கள்)...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....

‘இது எனது சிறந்த இன்னிங்ஸ்’ விராட்கோலி மகிழ்ச்சி : சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் வாழ்த்து

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தனது சிறந்த இன்னிங்ஸ்’ என்று இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் விராட்கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டம்...

தென் ஆபிரிக்காவுடனும் இலங்கை தோல்வி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (குரூப்-1), நியூசிலாந்து, இந்தியா (குரூப்-2) ஆகிய 4 அணிகள் அரை...

ஆஸ்திரேலியாவை நொறுக்கி அரைஇறுதிக்குள் நுழைந்தது இந்தியா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை நொறுக்கியெடுத்து இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டன. இந்த நிலையில் அரைஇறுதிக்குள் நுழையப்போகும் எஞ்சிய இன்னொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான...

வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 20 ஓவர் உலக கோப்பை தொடரில், நாக்பூரில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 18–வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் –ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் சந்தித்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ‘சிக்சர் மன்னன்’...

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை; 10 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியை பறிகொடுத்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி...
Loading posts...

All posts loaded

No more posts