அவுஸ்திரேலியா திரும்புகிறார் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவிலேயே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளார். இதன்படி, அடுத்த 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்துவரும் 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் ஸ்மித்...

விடைபெறும் டில்ஷான்

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். மேலும் 78 இருபதுக்கு இருபது போட்டிகளை சந்தித்துள்ள அவர், 1 சதம் 13 அரைச்சதங்கள் அடங்களாக...
Ad Widget

சாதனையைத் தவற விட்டார் சந்திமால்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் இலங்கையணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தவறவிட்டுள்ளார். குமார் சங்கக்கார, சனத்...

இலங்கை அபார வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது....

கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை

இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு எதிராக முறைப்பாடு; ஆறு வருடங்களாக நிதி மோசடி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (cope) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெதி இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றிற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்...

அஷ்வின், சகாவை புகழ்கிறார் கோலி

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போர்ட் ஒஃப் ஸ்பெயினில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி, வெறும் 22 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. எனவே, இந்திய அணி 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரித்திமான் சகாவினால் கீழ் வரிசையில்...

பழிதீர்க்குமா இலங்கை?

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2.30மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பிக்கிறது. சொந்த மண்ணில் இடம்பெறுகின்ற தொடராக இருந்தாலும் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வென்ற நிலையில் அழுத்தத்துடனேயே இலங்கை அணி களமிறங்குகிறது. முதலாவது போட்டியில் ஆறு சுழற்பந்துவீச்சாளர்கள் தெரிவுடன்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை

தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான எதிர்வரும் கிரிக்கட் தொடரிலும், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த வருட ஆரம்பத்தில் காயமடைந்த அவர், ஐ.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் அடுத்த...

டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்து பாகிஸ்தான் அணி சாதனை

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது. பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான்...

அவுஸ்திரேலியா வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் குஷல் பெரேரா ஒரு ஓட்டத்துடன்...

நிறைவடைந்தது ஒலிம்பிக்: அமெரிக்காவுக்கு முதலிடம்!

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர்....

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

ஏஞ்சலோ மெத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசேல் ஜனித் பெரேரா, குசேல் மெண்டிஸ், டில்சான், தனஜ்ய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர்தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?

இலங்கை கிரிக்கெட்அணியின் சீனியர் வீரரான திலகரட்ன டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டில்ஷானுக்கு தற்போது 39 வயதாகிறது. இதனால் அவர் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டில்ஷான் இலங்கை அணியில் களமிறங்கி பட்டையை...

ஓய்விற்கு பின்னரும் அசத்தும் ஜெயவர்த்தனே

இங்கிலாந்தில் நடைபெற்ற வொர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி சதத்தால் சமரெஷ்ட் அணியை வெற்றி பெற செய்தார் ஜெயவர்த்தனே. இங்கிலாந்தில் ராயல் லண்டன் தொடருக்கான காலிறுதி போட்டி, அந்நாட்டில் உள்ள கண்டிரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வொர்செஸ்டர்ஷையர் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது....

அதிவேக கோல் அடித்து நெய்மார் சாதனை

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் கேப்டன் நெய்மார் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி...

163 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான குஷல் சில்வா (0), திமுத் கருணாரத்ன (7) அடுத்தடுத்து...

றியோ ஒலிம்பிக் பதக்க விழாவில் திருமணக் கோரிக்கை

சீன நீரில் மூழ்கும் வீராங்கனையான ஹீ ஸி, மூன்று மீற்றர் உந்துவிசைப்பலகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் அவருக்கு அதை விட இன்னொரு பரிசும் கிடைத்திருந்தது. அவரது ஆறு வருட காதலரான குவான் காய், நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்த பதக்கம் வழங்கும் நிகழ்வில், ஒரு முழங்காலில் அமர்ந்து திருமணக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடந்த வாரம் ஆண்களுக்கான மூன்று...

இலங்கைக்கெதிராக போராடுகிறது அவுஸ்திரேலியா

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட்டு இழப்புக்கு 22 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட இரண்டு ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது களத்தில், திமுத் கருணாரட்ன 8...

இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts