Ad Widget

அஷ்வின், சகாவை புகழ்கிறார் கோலி

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போர்ட் ஒஃப் ஸ்பெயினில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி, வெறும் 22 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. எனவே, இந்திய அணி 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

koly-aswin

இந்நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரித்திமான் சகாவினால் கீழ் வரிசையில் பெறப்பட்ட ஓட்டங்களே குறித்த தொடரின் மிகப்பெரிய நேர்மறையான விடயம் என இந்திய அணித் தலைவர் விராத் கோலி கூறியுள்ளார்.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும், இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் பொருட்டு ஆறாவது இடத்தில் களமிறக்கப்பட்ட அஷ்வின், முதலாவது போட்டியிலும் மூன்றாவது போட்டியிலும் சதங்களைப் பெற்றிருந்ததுடன், சகா, முதலாவது போட்டியிலும் இரண்டு போட்டியிலும் 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் மூன்றாவது போட்டியில் சதம் பெற்றிருந்தார்.

இத்தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அஷ்வின் இத்தொடருடன் ஆறாவது தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இது, இந்திய வீரரொருவரால் அதிக தொடர் நாயகன் விருதுகளை அஷ்வினே பெற்றுள்ளார். அஷ்வின் அறிமுகமானதன் பின்னர் இந்தியா வென்ற ஏழு தொடர்களில் ஆறில் அஷ்வினுக்கே தொடர் நாயகன் விருது கிடைத்துள்ளது. உலகில் தோன்றிய தலைசிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான சச்சின் தென்டுல்கர், தனது அதிரடித் துடுப்பாட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்த வீரேந்தர் ஷேவாக் ஆகியோர் ஐந்து தொடர் நாயகன் விருதுகளையே வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம், மூன்றாம், நான்காம் நாள்களைப் போலவே பிரகாசமான சூரிய வெளிச்சத்துக்கு மத்தியிலும் விளையாட முடியாது என காலை 9.30 மணிக்கே ஐந்தாவது நாளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைவிடப்படாத டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது மிகக் குறுகிய டெஸ்ட் போட்டியாக வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டது.

Related Posts