Ad Widget

டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்து பாகிஸ்தான் அணி சாதனை

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது.

Pakistan

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கான விளம்பில் நின்று கொண்டிருந்தது.

ஆஸ்திரேலியா பிடித்த முதல் இடத்தை இந்தியா கடந்த 18-ந்தேதி பிடித்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றாவிடில் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

தற்போது மழையினால் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்து தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியதால் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா 108 புள்ளிகளடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அதேபுள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

Related Posts