எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணம் 3 ஒருநாள் போட்டிகளையும் 3 இருபதுக்கு – 20 போட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது.
போட்டி அட்டவணைப்படி, இந்த முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13 ஆம் திகதி டெல்லியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வளிமாசடைவு மற்றும் டெல்லி மைதானத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் என்பவற்றை முன்னிட்டு, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கோரிக்கைக்கு இணங்க, இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.