யாழ் நலன்புரி முகாம்களுக்கு சென்ற மங்கள

நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழிலுள்ள நலன்புரி முகாம்கள் சிலவற்றுக்கு விஜயம் செய்த வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் யாழிலுள்ள நலன்புரி நிலையங்கள் சிலவற்றையும் பார்வையிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார் மங்கள

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற...
Ad Widget

Studio Photography Backdrops Background Paper Rolls on the Wall

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

நாடு முழுவதும் மழையும் காற்றும்!

நாடு முழுவதிலும் ஓரளவு பலமான காற்று வீசலாம் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் வேகம் மணிக்கு 50 -60 இடைப்பட்டதாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணம் என்பவற்றிலும், யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது....

தமிழ் மக்கள் மீதான அநீதி தொடர்கிறது: ஐ.நா

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்...

மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும்

தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இவ்விடயம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத்தில் இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தில்...

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினர் விடுதலை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. அதன் பிரகாரம் சிறு சிறு குற்றசாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள்,இதுவரையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு விடுதலை அளிப்படவுள்ளது. தமிழ் அரசியல்...

 25 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி மரணம்

முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது, மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த...

காட்டு யானையில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 02 ஆக அதிகரிப்பு

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்த 05 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான். கனடா செல்வதற்காக வடக்கில் இருந்து வந்த குழுவொன்று மீது நேற்று அதிகாலை 2.20 மணியளவில் காட்டு யானை தாக்குதல் நடத்தியது. இதனால் வேனில் இருந்த 39 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே...

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை...

வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சிலர் கூறுவது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் தாம் பிரபல்யம் அடைவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சர்வதேச...

பொலீஸாரின் உதவியுடன் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடரந்து ஈடுபட்டிருந்தனா். தமக்கு 7 வருடங்களாக காணி விடயம் தொடா்பில் அதிகாரிகளினால் அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரத்தில் எடுப்பட்டவா்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 1983ஆம்...

இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்!

கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...

த.தே.கூ. எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் முறைப்பாடு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றமையால் குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்படவுள்ளது. முறைப்பாட்டினை வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லிணக்க பொறிமுறைகளை...

வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினிற்கு எதிராக யாழில் போராட்டம்

வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்பாணம் ஐந்து...

வடக்கு முதலமைச்சர் நிதி சட்டம் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில் விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் இரண்டு மாதங்கள்...

வலி வடக்கில் காணிவிடுவிப்பு : மக்களை ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ள...

வேன் மீது காட்டு யானை தாக்குதல்!! ஒருவர் பலி! 10பேர் படுகாயம்!!

புத்தளம் - அநுராதபுரம் பாதையில் கருவலகஸ்வெவ மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் வேன் மீது காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த காட்டு யானைத் தாக்குதலில் உயிரிந்துள்ளவர், யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதான நபர் என தெரிவந்துள்ளது.இதில் காயமடைந்த...

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது பொய்: இராணுவம்

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,...

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்!

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...
Loading posts...

All posts loaded

No more posts