Ad Widget

பொலீஸாரின் உதவியுடன் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தொடரந்து ஈடுபட்டிருந்தனா்.

mullai-family-1

தமக்கு 7 வருடங்களாக காணி விடயம் தொடா்பில் அதிகாரிகளினால் அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரத்தில் எடுப்பட்டவா்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் 1983ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருவதாகவும், தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணி பிணக்கு 7 வருடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கும் குறித்த குடும்பத்தினர், இன்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

தாம் 7 வருடமாக எவ்வித பாதுகாப்புமற்ற தற்காலிக கொட்டகையிலேயே வசித்து வருவதாகவும், தமக்கு மலசல கூடம், வீட்டு திட்டம் உட்பட எவ்வித அரச உதவிகளையும் தருவதில்லை எனவும் குறித்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

அத்துடன், நீதிமன்று ஒன்றில் வழக்கொன்று இடம்பெற்று கொண்டிருக்கையில், அரச அதிகாரிகள் தமது விடயத்தில் பக்கச் சார்பாக செயற்படுகின்றமையால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இதற்கு அரச உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எம்மை போன்று வேறு ஏழைகள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்தே உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டனா்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டவா்களின் உடல்நிலை மோசமானதனை தொடா்ந்து பொலீஸாரின் உதவியுடன் அவா்கள் மீட்க்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

.

Related Posts