- Friday
- August 14th, 2026
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாகவும் இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த...
காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்புடன் கூடிய பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அவசியம் எனவும் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற...
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி 5பேர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்டவர்...
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் மூன்று மணியளவில்...
'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு...
வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிகல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இதற்கு அப் பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...
போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே குற்றச் செயல்கள் மலிந்து வருகின்றன. பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட சாரணியர் சங்கத்தின் நூறாண்டு நிறைவையொட்டி கனடாவில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையின் அறிமுக நிகழ்ச்சி இன்று...
கலங்கரை விளக்குகள் தொல்லியல் சின்னங்கள் இல்லை. என சட்டத்தரணி ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனலைதீவில் உள்ள கலங்கரை விளக்கு இடிதாங்கி களவாடியமையை தொல்லியல் சின்னத்திற்கு சேதம் விளைவித்தது எனும் குற்ற சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர். குறித்த வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான்...
கனகராயன் காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கனகராயன் குளப் பகுதியில் அமைந்துள்ள விசேட காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்த 210ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு முன்னால் 3அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றும் ஒன்றரை அடி புத்தர் சிலையும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையே...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அக்காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...
இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு...
'எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்' என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உதவித் தலைவர் எனட் டிக்ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. நேற்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த குறித்த குழுவினர், சுமார் ஒரு மணி நேரம் முதலமைச்சருடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்...
யுத்த காலத்தில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான எதிரப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவில் சிலர் பேரணியாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும், பிரதேச செயலகங்களில்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனுடைய பெயரை, இறுதிக் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் காணாமல் போனோர் தொடரபான அலுவலகத்தில் பதிவு செய்ய தான் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் சம்மதம் தெரிவித்தால் இதைச் செய்ய தான் ஆயத்தமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்....
அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில்...
ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான்...
வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம்...
Loading posts...
All posts loaded
No more posts
