Ad Widget

முதலமைச்சர் விக்னேஷ்வரன், எனட் டிக்‌ஷன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உதவித் தலைவர் எனட் டிக்‌ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

66396401Untitled-1

நேற்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த குறித்த குழுவினர், சுமார் ஒரு மணி நேரம் முதலமைச்சருடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்,

நெல்சிப் திட்டத்தின் 2ம் பகுதி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீன மயப்படுத்தல் தொடர்பாகவும், மூலோபாய நகரங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே அவர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது யாழ். நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.

விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக பேசுகையில், குறிப்பாக நாங்கள் வழக்கத்தின் அடிப்படையில் சில விவசாய நடவடிக்கைகளுக்கான சில முறைகளை கையாண்டு வருகின்றோம். ஆனால் வியாபார நோக்கம், காலநிலை, நிலத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம். அவை தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.

இதேவேளை வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக உலகவங்கி உதவிகளை வழங்கும். என கூறியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவ்வாறான உதவிகள் நிச்சயமாக தேவை என்பதையும் நாங்கள் வலியுறுத்தி கேட்டிருக்கின்றோம் என்றார்.

Related Posts