நயினாதீவு கடற்பரப்பில் கஞ்சா மீட்பு

நயினாதீவு கடற்பரப்பில் 10 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை இரவு நயினாதீவு கடற்பரப்பு பகுதியில் இருந்த கஞ்சாவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கஞ்சாவினை கடற்பரப்பில் வைத்த சந்தேகநபர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என்றும் பொலிஸார்...

விகாரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்குக் கடிதம்

வட மாகாணத்தில் உள்ள விகாரைகளில் தொடர்ந்து இடம்பெறும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவாக தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என ஹெல பொது சவிய அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அமைப்பின் தலைவர் வண. புத்தகல ஜீனவங்ஸ தேரர், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாணத்தில் உள்ள விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு...
Ad Widget

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு ஆரம்பம்

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 2-09-2016 ஐ.நா செயலாளர் யாழ்வரும்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு யாழ் பொது நூலகம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ஊடக அறிக்கையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்

வைத்தியரை மோதிய சாரதிக்கு விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான தனியார் பேருந்தின் சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். கடந்த திங்கட் கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது-37) என்ற...

வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியில் வீடொன்றில் இருந்து 2 பிள்ளைகளின் தாயான 47 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் வட்டக்கச்சி மற்றும் கிளிநொச்சி பொலீஸார் பொலிஸார்...

முள்ளிவாய்க்கால் காணி சுவீகரிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முள்ளிவாய்க்காய் பகுதியில் கோட்டாபய கடற்படைத்தளம் அமைந்துள்ள காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கூட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவனேசன், வடமாகாண பிரதி அவைத்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன்பின்னர் தென்னிலங்கை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்,...

பரவிப்பாஞ்சான் மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில்

கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த...

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் இன்று ஆரம்பம்

புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட...

சிங்கள மாணவர்களை 22இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய 04 சிங்கள மாணவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். நீதவான் தீதிமன்றத்தில் சிங்கள மாணவர்கள் நான்கு பேர் முன்னிலையாகிய போதே, எதிர்வரும் 22ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சதீஸ்கரன் கோப்பாய் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்....

அச்சுவேலி முக்கொலை வழக்கில் பிணை நிராகரிப்பு! பிணை மனுவும் தள்ளுபடி!!

யாழ்.குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்ற எதிரியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அந்தப் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து 31ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்தப் பிணை மனு தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம்...

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விழி வெண்படலத்தை நீக்கும் மருத்துவ முகாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. நாளை சனிக்கிழமை 03 ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்ததினத்தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவம் நிலையில், நேற்று வியாழக்கிழமை யாழ். போதனா...

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் நாளை யாழ்.மாவட்டத்திற்கு வருகைதர இருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்...

ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும்,...

உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புத்தர் சிலை

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக...

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவருக்கு வேலைவாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இவ்வாறான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு...

தேசிய தமிழ் மொழி தினம் ஒக்டோபர் 23 கண்டியில்

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ்...

தண்ணீர் போத்தல்களுக்கும், ஹெல்மட்களுக்கும் இன்று முதல் புதிய சட்டம்!

சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது...

எரிபொருள் விலையை உயர்த்துதவற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம் இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது. டீசல் உற்பத்திக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு, விலை அதிகரிப்பிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. டீசல் உற்பத்தி வரி 3 ரூபாவிலிருந்து 13 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பானது பெற்றோல் உற்பத்தியிலும் தாக்கத்தை...
Loading posts...

All posts loaded

No more posts