Ad Widget

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

may-moon

இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன்பின்னர் தென்னிலங்கை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை கொழும்பிற்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயன்முறை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வடக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் பான் கீ மூன் கலந்துரையாடவுள்ளதுடன், நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் செயலாளர் பான் கீ மூன் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts