வட மாகாணத்தில் உள்ள விகாரைகளில் தொடர்ந்து இடம்பெறும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவாக தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என ஹெல பொது சவிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், அமைப்பின் தலைவர் வண. புத்தகல ஜீனவங்ஸ தேரர், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.