- Thursday
- August 20th, 2026
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. “சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும்...
தனியார் மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் சைட்டம் போதனா வைத்தியசாலை, விரைவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி...
ஆபத்தான தொழிற்துறைகளில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊழியர் ஒருவர் மரணமடையும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின்...
ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டதினரையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான...
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...
கிளிநொச்சி - ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும்...
அரசியல் தீர்வானது தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டித்தீர்வு அமைய வேண்டும், அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது. கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டு பிரகடனம் நேற்று வௌியிடப்பட்டது. குறித்த பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது....
என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம், எனது வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்து உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017ம் ஆண்டு...
தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால்...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டனர். மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு...
ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும்...
"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி...
யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற குறித்த திறப்பு விழாவில், அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
சர்வதேச பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த அறிக்கை, ஏற்றுக்கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது....
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி ஈழ தமிழர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தினை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை வேறு...
வடபகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் வேளை கன மழை பெய்துள்ளது. ஒரு சில மணித்தியாலயங்கள் பெய்த கன மழை காரணமாக வீதிகள் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. தற்போது கால போக நெல் அறுவடை முழுமையாக நிறைவுப் பெறாத நிலையில், மழை பெய்துவருவது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அறுவடை செய்த நெல்லை உலர வைக்க...
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும்...
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில்,...
கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை,...
Loading posts...
All posts loaded
No more posts
