Ad Widget

காணாமல் போனோரின் உறவுகள் இன்றும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் கடந்த 24 ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் மற்றும் தபால்மூல கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தபால் மூல கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Posts