பல்கலை விரிவுரையாளர்கள் சங்கமும் போராட்டத்தில்

சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கைவிடப்படும்!- ஜெனீவாவில் அரசாங்கம் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை செயப்படுத்துவதில்லையென இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பிலான ஆலோசனை வழங்கியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சின் செயலாளர் மனோ தித்தவெல்ல நேற்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவிப்புச் செய்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்காது என மனித...
Ad Widget

கேப்பாப்பிலவு மக்களின் தொடரும் மண்மீட்பு போராட்டம்

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது. தமது பூர்வீக கிராமத்தில் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், ராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்...

ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற...

யாழ்.வரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அனந்தி கோரிக்கை

யாழ்ப்பணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தை உற்சாகபடுத்தவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். ஐநா கூடியுள்ள இந்த நேரத்தில் சரணடைந்த...

அரச திணைக்கள விருந்து நிகழ்வில் மது! ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பு!!

கிழக்கு மாகாணத்தின் அரச திணைக்களத்தில் மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில்,...

11 தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம்; இரு கடற்படை வீரர்கள் கைது

2006 ம் ஆண்டில் பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக...

இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள எமது விவசாயிகள் முன்வர வேண்டும்

இயற்கை விவசாயத்தால் அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உணவு படைக்க முடியாதென்று விவசாய இரசாயனங்களை உற்பத்தி செய்துவரும் பன்னாட்டு நிறுவனங்களும், கலப்பின விதைகளுக்கும் மரபணுமாற்று விதைகளுக்கும் காப்புரிமை பெற்றுவைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் பரப்புரை செய்து வருகின்றன. ஆனால், கியூபா ஏற்கனவே இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்துகாட்டியுள்ளது. இந்தியாவில் சீக்கிம் மாநிலம் முற்றுமுழுதாகச் சேதன விவசாயத்துக்குத் திரும்பியிருக்கிறது. கோவா மாநிலமும்...

பொதுப்போக்குவரத்தில் 90வீத பெண்களுக்கு பாலியல் தொல்லை!

இலங்­கையின் பொதுப்­போக்­கு­வ­ரத்தில் 90 வீத­மான பெண்கள் பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென சிறுவர் விவ­கார அமைச்சு, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிர­தமர் அலு­வ­லகம் மற்றும் இலங்­கை பொலிஸ் என்­ப­வற்­றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாது­காப்­பா­னதா?” என்ற தொனிப்­பொ­ரு­ளி­லான பொது­மக்­களை அறி­வூட்டும் ஒரு பிர­சார நட­வ­டிக்­கையை...

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில் சேவைகள்

பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, எதிர்வரும் 7 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 48 மணி நேரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமை ஆர்வலர்களின் பார்வை தம்மீது திரும்ப வேண்டும்: ஈழ அகதிகள் கோரிக்கை

இந்தோனேசியாவில் நீர்கூட அருந்தாமால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற ஈழத் தமிழர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப் பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலிய நோக்கி பயணித்த ஈழத் தமிழ் மக்கள் இந்தோனேசிய கடற் படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இந்தோனேஷியாவில் அகதி...

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம் ஆராய குழு

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு வருகை தரவுள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் ஏற்பாட்டில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான தரத்தினையும் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் எழுகின்ற நடைமுறைப் பிரச்சனைகளை ஆராய்வது என்ற அடிப்படையிலேயே குறித்த குழுவினர் இன்றைய(3) தினம்...

காணாமல்போனோரை கண்டறிய உதவி கோரல்

சவூதி அரேபியா, லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று காணாமல் போன இலங்கையர்கள் ஐவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவதற்காக, மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதத் தகவல்களும் இல்லாத இந்நபர்கள் தொடர்பில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது....

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு, அரசாங்கம் சம்மதித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவுச் செயற்குழுவே, இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர், சீனிக்கான சில்லறை விலையாக, 93 ரூபாயைக் கட்டுப்பாட்டு...

ஐந்நதாவது நாளாக தொடரும் வடக்கு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரைய​ரையின்றி இவர்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த பொதுக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப்...

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி மீண்டும் உறுதி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

அரசாங்கம் பதில் வழங்கும்வரை போராடுவோம்

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று 8 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, தபால்மூல கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்...

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போயுள்ளோம் : வடமாகாண பட்டதாரிகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஐந்தாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பு அற்ற...

வடமாகாண சபை வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts