- Thursday
- August 20th, 2026
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மான விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்து கூறப்பட்டிருந்தது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கால அவகாசம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களில்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள மாணவர்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தகவலை பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன நேற்று தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை...
காணாமால்போயுள்ளதாக கூறப்படும் பலர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணவத்திடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே பிரதமர் மீண்டும் இந்தக் கருத்தை...
மாகாண சபை உருவாக்கத்தின்பின்னர் வட மாகாண கல்வி அமைச்சில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் அதிக பட்டதாரிகள் வேலையற்றுக் காணப்படுகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய...
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்....
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் நேற்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு எமது பூர்வீக நிலம். எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்க தெரிவித்து பூநகரி மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினர் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார். அண்மையில், கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழக மீனவர்...
நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்று காலை நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர் கடலில் பொதியொன்று மிதந்து வருவதை அவதானித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நயீனாதீவில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு அவர்கள் தகவலளித்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட...
எதிர்காலத்தில் ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெள்ளை நிறத்திலான சிகரெட் பொதி அட்டைகளை அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியை பெறுவதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புளத்சிங்கள, ரெட்டியல பாடசாலையில்...
இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்துசமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆஸி.பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடன்...
யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மனித சங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு இதுவரை அதிகாரபூர்வமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வெண்டும் எனவும், கால தாமதமின்றி தீர்வு வேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நிதீமன்றிற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோர்...
உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்ட வெகுசன பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என்னும் கருப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இது யாழ் மாவட்ட வெகுசன பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சாந்தா ஆரோக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த...
அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார்.நேற்று இடம்பெற்ற குறித்த விபத்து அவரது நண்பரால் அவ்விடத்தில் இருந்து கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல , இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயது இளைஞராவார்.எலுவந்தெனிய நடுவத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் நேற்றைய...
வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 4ஆம் திகதி யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி இருந்தமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்...
வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்றயதினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில்...
தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியுடன் கலந்தரையாடியுள்ளார். அவ்வேளை மீனவர் கொலை சம்பவம் இனி தொடராது என ஜனாதிபதி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற...
Loading posts...
All posts loaded
No more posts
