பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றும் நாளையும் அடையாள வேலைநிறுத்தம்

சம்பள முரண்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (08), நாளையும் (09) அரச பல்கலைக்கழங்களின் விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுத்துள்ளது. களனி பல்கலைக்கழகம் உட்பட சலக பல்கலைக்கழக பேராசிரியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் தீர்வு கிடைக்காவிடின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சம்மேளனம் கூடி...

சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம்

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த்...
Ad Widget

மாற்று வடிவம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

வேலைவாய்ப்பை வழங்கக்கோரி தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரை எவ்வித உறுதியான பதிலும் வழங்காத நிலையில் இன்றைய தினம் தமது பேராட்டத்தை வேறு வழியில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மனிதச் சங்கிளி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு யாழ்ப்பாண கல்விச் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும்...

கடிதத்தில் கையெழுத்திட்டதில் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் குழப்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது....

அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா தொகையை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

தனியார் துறை ஊழியருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாவை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பள அதிகரிப்பு தொகையை சில நிறுவனங்கள் வழங்காதமை தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொழிலாளர் உரிமையை மீறும் பாரிய குற்றமாகும்...

நாட்டின் பொருளாதாரத்தில் கூடுதலான சுமையை ஏற்பவர்கள் பெண்கள்

நாட்டின் பொருளாதாரத்தில் கூடுதலான சுமையை ஏற்பவர்கள் பெண்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள இந்த வாழ்த்துச்செய்தியில் ,

பெண்களுக்கான சுதந்திரம், அங்கீகாரம், ஊக்குவிப்பு மற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் பொறுப்பு

பெண்களுக்கான சுதந்திரம், அங்கீகாரம், ஊக்குவிப்பு மற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச்செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கின்றனவா, கௌரவமும் பாராட்டுக்களும் கிடைக்கின்றனவா என்பது...

யாழ் கொம்படி விமான ஏவுகணை தாக்குதல் வழக்கில் எதிரி விடுதலை

யாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிகாரி ஒருவர் உட்பட 4 விமனாப்படையினரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரியை செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்றது. விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின்...

போராட்டா்தில் ஈடுபடும் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளருக்கும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதிக்கும், சமாதானத்திற்கும், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளப்போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....

முஸ்லிம்கள் எம்முடன் இணங்கும் வரை வட கி­ழக்கு இணைப்பு சாத்­தியமில்லை : சுமந்­திரன்

கிழக்கில் வாழும் முஸ்­லிம்கள் எங்­க­ளுடன் இணங்கி வரும் வரைக்கும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தியம் இல்லை. இதுதான் உண்மை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்பின­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். நேற்று முன்­தினம் பருத்­தித்­துறை தொகுதி தமி­ழ­ரசுக் கட்­சிக்­கிளைக் கூட்­டத்தில் கலந்து கொண்டு சம­கால அர­சியல் குறித்து...

திருகோணமலையில் அபகரிக்கப்பட்டுவரும் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை!

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதாக அப்பகுதி மக்களாலும், பொது அமைப்புகளாலும் தொடர்ந்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி செயற்பாடுகள் இந்த அரசிலும் தொல்பொருள் திணைக்களத்தினூடாக தொடர்வதாகவே எமது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவி வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளின்...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார் வடமாகாண நீர் தேவைகள், குடிநீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவை தலைவர் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை...

வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு ஆரம்பம்

வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வை ஏற்கனவே கடந்த மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனமுற்றிருந்ததால் அமர்வு பிற்போடப்பட்டது. முதலமைச்சர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய...

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் இவ்வாறு...

சீனியின் விலை ரூ.125 வரை உயர்வு?

நாட்டுக்குள் பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி ஒரு கிலோகிராமின் விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது. விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி ஒரு கிலோகிராமுக்கான மொத்த விற்பனை விலை, 93 -...

இணையத்தளத்தில் பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையைப் பெறலாம்

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) இன்று முதல், இணையத்தளத்தின் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய இணையத்தளம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு அமைவாக, இன்று முதல் www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக, பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினைச் சமர்ப்பித்து, துரிதமாகப்...

நாங்கள் சுடவில்லை: கடற்படை

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டமை பொய்யானச் செய்தி என, கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டின் கமாண்டர் சமிந்த வலாகுல​​கே தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான துப்பக்கிச் சம்பவம், இலங்கை கடற்பரப்பில் நேற்றையதினம் இடம்பெற்றிருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் அடித்துக் கொலை

தெரணியகல, மாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ள ஏழுவயதான பெண் பிள்ளையும், 45 வயதான மற்றுமொரு நபரும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. அவர்களின் வீட்டுக்கு நேற்றிரவு வருகைதந்த இனந்தெரியாத நபரே இக்கொலைகளை புரிந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான பெண்பிள்ளையின் தாய், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர...

வட்டுக்கோட்டையில் நேற்று வாள்வெட்டு! சகோதரர்கள் இருவர் படுகாயம்!!

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக சகோதரர்களான இரு குடு ம்பஸ்தர்கள் மீது 20 பேர் கொண்ட குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த குடும்பஸ்தர்கள் இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவேறு கிராம இளைஞர்களுக்கிடையில் விளையாட்டு...

நாளை ஹர்த்தால் இல்லை!

முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்பு மக்களின் 30 நாள் தொடர் போராட்டத்தை அடுத்து, அந்த மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாத பட்சத்தில் வடக்குக் கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூடிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி உறுதி அளித்ததின்படி பிலவுக்குடியிருப்பு மக்களின்...
Loading posts...

All posts loaded

No more posts