- Tuesday
- May 12th, 2026
தனியார் வீடொன்றில் சித்திரவதை முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக குற்றம்சாட்டப்படும் பேராதெனிய பல்கலைக்கழக விவசாய பீட 15 மாணவர்களுக்கு இன்று முதல் (22 ஆம் திகதி) விரிவுரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மாணவர் ஒழுக்காற்றுக் குழுப் பொறுப்பாளர் கலாநிதி ஹிடிநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். பிரதான விசாரணை முடியும் வரையில் இவர்களது விரிவுரைத் தடை...
வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது எனவும், இணைந்த மாகாணத்தில் தமிழ் தலைமைகள் கூடுதல் அதிகாரம் கோரியதனாலேயே இனங்களுக்கிடையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை...
வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் உள்ளது...
மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகம் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். ‘தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காது தொடர்ந்தும் அரசாங்கத்தினைப் பாதுகாப்பதை விடுத்து ஓர் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன் காலநீடிப்பு வழங்குவதை முழுமையாக...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களுடைய கொள்கையுடன் உடன்பட்டு செயற்படும்வரை அவரை தமிழ் மக்களின் மாற்று...
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 153.44 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149 ரூபா 68 சதமாக காணப்படுகின்றது. டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை...
“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால்...
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும்...
எதிர்வரும் 24ம் திகதி முதல் நாட்டின் தென்பகுதியில் மழை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கரையோரப்பிரதேசங்களிலும் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவிற்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படகு ஓரளவிற்கு சரிவிற்குள்ளானதாகவும் கடற்படையினர் விரைந்து சென்று அதிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது. 20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 2017ஜனவரி மாதம் வரை யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் மொத்தமாக 578,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரவியலில் இருந்து இந்த தகவல்கள்...
இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய...
கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்படி கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் அறிமுக ஆரம்ப...
ஒரு மருத்துவராக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது பகிரங்கமாக மருத்துவர் போன்று செயற்படும் சைட்டம் மருத்துவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. தெற்காசியாவின் தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (SAITM) தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் அதன் மருத்துவ பீடத்தின் பணிப்பாளர்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளைக் கண்டறியவதற்கும், போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் ‘பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு நடமாடும் குழு’ நிறுவப்பட்டுள்ளது என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாட்டுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாத்தல், குற்றங்கள் மற்றும் மோதல்கள் இன்றி நம்பிக்கையுடன் வாழக்கூடிய சுற்றுச்சூழலை ஸ்தாபித்தல் ஆகிவற்றுக்கான பொலிஸின் நோக்கத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாகவே ‘பொலிஸ்...
தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களினால், நேற்று (20) ஒருமணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள சகல பாடசாலைகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும், யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில்...
“மோதல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமாயின், பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘பிக் மெச்’ கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும்” என, ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்....
காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர், கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...
பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாயபீட புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் 15 பேர் நேற்றுக்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது மார்ச் (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இம்மாணவர்கள் நேற்று(20) அதிகாலை 01.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை –...
Loading posts...
All posts loaded
No more posts
