Ad Widget

வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது

வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது எனவும், இணைந்த மாகாணத்தில் தமிழ் தலைமைகள் கூடுதல் அதிகாரம் கோரியதனாலேயே இனங்களுக்கிடையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்த கருத்துக் குறித்து இவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைவுக்கு கிழக்கு தமிழர்களே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களும், தெற்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் உடன்படிக்கையினால் இது இணைக்கப்பட்டாலும், தற்பொழுதுள்ள நிலையில் அதனை மீண்டும் இணைப்பதற்கு இந்தியா முயற்சிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts