- Tuesday
- May 12th, 2026
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கடந்த காலத்தில் தொடர் போராட்டங்களை நடத்திவந்த மக்கள், உரிய தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று முதல்...
சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது....
வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட...
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 ஆவது நாளாகவும் இன்று விமானப்படைத் தளத்துக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஆதரவு பெருகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த...
வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒருபோதும் திரும்பி அனுப்பி வைக்கப்படவில்லையென வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகணசபையின் 85 ஆவது அமர்வு இன்று வடமாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், தியாகராஜா ஆகியோர் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்வதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகும் நிலையில் அதன்...
நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும்...
இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ராணுவ முகாம் அமைந்துள்ள 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பிரதேச செயலகத்திற்கு முன்னால்...
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரிசி பதுக்கி வைத்தல், அரசின் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் மற்றும் இரசாயன கலவை அடங்கிய அரிசி விற்பனை செய்தல் போன்ற மேசடிகள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கம் காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குமென அவர்...
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது. இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம்...
கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்...
யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாயில் உள்ள கள்ளுத் தவறணைக்கு முன்னால் நேற்றையதினம் பட்டப் பகலில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 8பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்றையதினம் கோப்பாய் கள்ளுத் தவறணைக்கு 5 உந்துருளிகளில் வந்த 9பேர் கொண்ட குழுவினர் அவ்விடத்தில் நின்றவர்கள் மீது கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் அவ்விடத்தில் நின்ற 8பேர் காயமடைந்துள்ளதுடன்...
சமூக விரோதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதந் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட 17 காவல் நிலையங்களிலும் ஏற்கனவே இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் இந்த காவல்துறைக்...
டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், நேற்று (20) உத்தரவிட்டார். தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....
கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில்...
யாழ். நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றது. நேற்று மாலை யாழ். கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு...
யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. 2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர்...
தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
