Ad Widget

யாழில் ‘சைக்கிள் படை’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் மற்றும் மோசடிகளைக் கண்டறியவதற்கும், போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் ‘பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு நடமாடும் குழு’ நிறுவப்பட்டுள்ளது என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாத்தல், குற்றங்கள் மற்றும் மோதல்கள் இன்றி நம்பிக்கையுடன் வாழக்கூடிய சுற்றுச்சூழலை ஸ்தாபித்தல் ஆகிவற்றுக்கான பொலிஸின் நோக்கத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாகவே ‘பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு நடமாடும் குழு’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு உட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலேயே இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டு, கடந்த 18ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டது.

யாழ். பிரஜைகளுக்கு மிகவும் நல்லமுறையிலான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே, இக்குழு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கீழுள்ள பிரதேசங்களில், தெரிவு செய்யப்பட்ட இரண்டு இடங்களில், உடனடியாக வீதித்தடைகளை ஏற்படுத்தி, சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நபர்களை இக்குழு சோதனைக்கு உட்படுத்தும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts