சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன்

வீடுகளில் சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக வங்கிகளில் ஒன்றரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் ரூபா வரையிலான தொகையை கடனாகப் பெறலாம். இதற்குரிய வட்டியில் 50 சதவீத சலுகையை மின்...

ஜெனிவா தீர்மானம் : தமிழர்களுக்கு ஏமாற்றம்

இலங்கைக்கு மேலதிக கால இடைவெளியினை வழங்கும் தீர்மானம் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை அளித்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றபட்டுள்ளது. இந்தப் புதிய தீர்மானத்தின் பிரகாரம் 2015 ஆண்டின் ஐ.நா...
Ad Widget

கடற்படையின் படகு மோதி மீனவர் பலி!! விடத்தல்தீவில் பதற்றம்!!

மன்னார் விடத்தல்தீவு கடற்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு கடற்படையினரும் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாசன் கில்மன் என்ற குறித்த மீனவர் குல்லா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது கடற்படையினரின்...

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்குவதில் எம்மவருக்கே முதலிடம்

“ஆசிய, பசுபிக் வலயங்களில் இலங்கையர்களே பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குகின்றனர் என, ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றில் புதன்கிழமையன்று இடம்பெற்ற, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்...

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் பாரிய விளையாட்டு மைதானம்

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு இருகில் பாரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. 32 ஏக்கர் நிலப்பரப்பில் 780மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் நேற்று காலை ஆரம்பமாகின. இந்த தேசிய விளையாட்டு மைதானம் முல்லைத்தீவுக்கு தேவை என்பதனை மறைந்த வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 68 ஆவது பிறந்த தினம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 68 ஆவது பிறந்த தினம் இன்றாகும். நாட்டின் நான்காவது பிரதமராக பதவி வகித்து நாட்டின் அரசியல் வரலாற்றில் சாதனைப்படைத்த பெருமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். 1993 ஆம் 2001ஆம், ஆண்டுகளிலும் 2015 ஆண்டிலும் இரண்டு முறை பிரதமராக பதிவகித்து இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நாட்டின் அரசியலில் அர்த்தமுள்ள ஜனநாயக...

சட்டவிரோதமாக சவுதியில் இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம்

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு, எதிர்வரும் 29ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அனைவரும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அல்லது இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகத்திற்கு சென்று தகவலளிக்குமாறு, வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரியப்படுத்தியுள்ளது. மேலும், தமது உறவினர்கள் யாரேனும் இவ்வாறு...

ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தால் இலங்கைக்கு கால அவகாசம்

40 நாடுகள் இணை அனுசரனை வழங்கிய பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கே இவ்வாறு இரண்டு வருட கால...

வட்டி வீதங்கள் அதிகரிப்பு

இன்றைய தினம் முதல் நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி நிலையான வைப்பு வசதிக்கான வட்டி கட்டணம் (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், நிலையான கடன் வசதி வட்டி கட்டணம் (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும்...

தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கோட்டாபய கடிதம்

தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த...

நாய்களைத் தெருவில் விட்டால் 2 வருட சிறைத்தண்டனை!

நாய்களை பொது இடங்களிலும் தெருக்களிலும் விட்டுச்செல்லும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதற்கமைய, நாய்களைத் தெருக்களில் விடுபவர்களுக்கு எதிராக, 1901ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது. இதன்படி நாயொன்றினைத் தெருவில் விட்டுச் செல்லும்...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் பொறுப்புக்கூற வேண்டும்: அனந்தி சசிதரன்

இறுதிக்கட்ட போரின்போது தமது உறவுகளை ராணுவத்திடம் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, அப்போது சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருந்த ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இணைத்தலைமை நாடுகளே ஏற்படுத்தியிருந்தன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில், பாதிக்கப்பட்ட தரப்பினர்...

வடக்கு முதல்வர் பதவி விலக வேண்டும்: பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தமது வேலையில்லா பிரச்சினையை தீர்க்குமாறு கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 25 நாட்களாக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...

“சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை”

யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர...

ஆலயத்திற்குள் மது அருந்திய நால்வர் பொலிஸாரால் கைது

தெல்லிப்பழை, பன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றில் மறைந்திருந்து மது அருந்திய நால்வரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் மது அருந்துவதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வாகன சாரதிகள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நால்வரும் ஆலயத்தோடு தொடர்பு...

இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நியமனம்

யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு 6 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே, மகேஸ்சேனாநாயக்கவுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; மனோ

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு...

மடு பிரதேசத்தில் பெருந்தொகையான காணி ராணுவத்தின் வசமுள்ளது

மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதாக மடு பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு எனும் அமைப்பானது, குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தருமாறு கோரி தகவல்...

விமல் வீரவன்சவின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தனக்கு பிணை வழங்க கோரி நேற்று (புதன்கிழமை) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவில் இருந்த போது, 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதனால் அரசாங்கத்திற்கு ரூபா...

பன்னங்கண்டியில் ஆரம்பமானது மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி – பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்கள் முன்னெடுத்துவந்த போராட்டம் தீர்வுடன் முடிவுற்றிருக்கும் நிலையில், தற்போது அங்குள்ள வேறு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காணி உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரஸ்வதி கிராமம் மற்றும் ஜொனி குடியிருப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆரம்பித்த இப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts