Ad Widget

ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தால் இலங்கைக்கு கால அவகாசம்

40 நாடுகள் இணை அனுசரனை வழங்கிய பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கே இவ்வாறு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைனால் தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன், மொன்டெனெக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து புதியதொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்தன. அந்த தீர்மானத்தில், இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்த அதேவேளை இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Posts