ஜெனிவா தீர்மானம் : தமிழர்களுக்கு ஏமாற்றம்

இலங்கைக்கு மேலதிக கால இடைவெளியினை வழங்கும் தீர்மானம் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை அளித்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றபட்டுள்ளது.

இந்தப் புதிய தீர்மானத்தின் பிரகாரம் 2015 ஆண்டின் ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில் இலங்கை காட்டிய முன்னேற்றம் குறித்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள 40 ஆவது கூட்டத்தொடரிலேயே பாரிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன் மீதான விவாதம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts