காங்கேசன்துறையில் கிணற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!! கடத்தப்பட்டவர்களின் உடையாதா ?

காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....

வடமாகாண தனியார் வகுப்புக்கள் தொடர்பில் புதிய நியதி சட்டம்!

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் மாலை ஆறு மணிக்கு பின்னரும் வகுப்புக்கள் நடத்த தடை விதித்து வடமாகாண சபையில் புதிய நியதி சட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்க உள்ளது. வடமாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே...
Ad Widget

சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் : வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: ஜூன் 12 முதல் விசாரணை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய 'ட்ரயல் அட்பார்' முறையில் இடம்பெறவுள்ளது. குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...

பட்டதாரிகளின் போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்!!!

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வடமாகாணசபையின் 93ம் அமர்வு நேற்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த சம்பவத்திற்கு கண்டனத்தை...

ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் களத்தில்; வௌிநாடு செல்லவும் தடை

லங்கையின் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

அகதிகளாக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் குறித்து தகவல் இல்லை! : சுவாமிநாதன்

யுத்தத்தின் பின்னர் அகதிகளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்த எவ்வித தகவல்களும் இல்லையென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த போதே, அமைச்சர்...

விக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த...

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த...

நாவற்குழி விகாரை தொடர்பாக ஆராயுமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் பௌத்த விகாரை பிரதேச சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரா அமைக்கப்படுகிறது என ஆராயுமாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவரசா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடை பெற்றிருந்தது. இதன்போது விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு...

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவீடன் தூதுவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். சுவீடன் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே...

பாடசாலை மாணவி தற்கொலை!

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிரிழந்த மாணவி 16 வயதானவர் எனவும், அவரது தாய் அவரை புறக்கணிப்பதாக கடிதெமொன்றில் மாணவி குறிப்பிட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....

கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்

திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச்...

இலங்கை விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்திற்கு அமைய பயணி ஒருவர் தனது கைப்...

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை

வவுனியா நகரில் நேற்று (புதன்கிழமை) மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் காற்று வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட வேளை நீதவான் எம்.கணேசராஜா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார். சந்தேகநபரை முன்னிலைப்படுத்தி விசேட குற்றப்புலனாய்வு துறை...

அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை: நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

யாழ். நாவற்குழியில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட தயாராகும் 300 பிக்குகள்

தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை...

முல்லைத்தீவில் மூன்று கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைத்திட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு கமநலசேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று கோடி 70 இலட்சம் ரூபா செலவில் பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மத்திய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு, நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைப்பு போன்ற பத்து வேலைத்திட்டங்கள்...

வித்தியாவின் கொலையுடன் கடற்படையினருக்கு தொடர்புண்டு: சிறிதரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடற்படையுடனும் இராணுவத்துடனும் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வித்தியாவின் கொலையில் கடற்படையினருக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், சிறிதரன்...
Loading posts...

All posts loaded

No more posts