- Tuesday
- August 25th, 2026
களுத்துறைச் சிறைச்சாலையில் தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பாக தாம் நீதிமன்ற விசாரணைகளின்போது இனங்காணப்பட்ட குறித்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை முன்னர்...
முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் அவரது உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது....
வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட...
அரியாலை உதயபுரம் பகுதியில் இளைஞன் ஒருவரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம், மண்டைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு அடிரடியாக தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்ற அனுமதியுடன், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் குறித்த கடற்படை முகாமிற்குள் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் முகாமை சோதனையிட்டுள்ளனர்....
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் குழுவின் கொட்டத்தை அடக்க, பொலிஸ் விசேட குழுவொன்று களத்தில் இறங்கியுள்ளது. சுமார் 10 பேரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குழு, வடக்கின் பல பகுதிகளிலும் ரகசிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் சிறிது காலம் வாள்வெட்டு கலாசாரம் ஓய்ந்திருந்த போதும், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது....
16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில்...
அப்பா எப்ப வருவார்? அப்பா கண் திறந்துவிட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்ட்மோடத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு, எங்கட அப்பா வெள்ளைதானே? ஏன் கறுத்தவர்? அப்பா வர நாங்க பாக்குக்கு போவம் யாழ்ப்பாணத்தில் நேற்திறயனம் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட இளம் தாய், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை...
யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய துரோகத்தனம் உள்ளதாக அவர்களது குடும்ப உறவினர்கள் சொல்லியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்து நேற்றய தினம் மனைவி தனது மூன்று மகள்களுடன் நஞ்சினை அருந்தி...
இலங்கையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமான இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழில்துறைக்கும் விவசாயத்தேவைகளுக்கும் பாரியதாக்கம்...
கருப்பை கழுத்து புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 10 வயதை தாண்டிய பெண் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் எச்.பி.வி தடுப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். இதனை கருத்தடை ஊசி என மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. ஆனால் அதில் உண்மையில்லை. கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு...
பேருந்துகளில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் நிலையை உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் இன்று வலியறுத்தினார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "வடக்கு மாகணத்தில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள். அதனால் பயணிகள் பேருந்தில் மிதிபலகைகளில் பயணம்...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் ஆறு பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் மூவர், அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரணி குருபரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒருவரும், யாழ்.மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும் இவ்வாறு இணங்காணப்பட்டுள்ளனர். 40...
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வேறு மாவட்டங்களில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கும் மீனவர்கள், தமது கரைவலைத் தொழிலுக்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 400இற்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு...
வடமாகான சபை உறுப்பினர்களும் அமைச்சர்களும், மாகாணச் சட்டங்களை கற்க வேண்டுமென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில், நேற்று (26) நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும்...
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் செய்யப்பட்ட, கண்புரைப் பாதிப்புக்கான சத்திரசிகிச்சையால், தனது உறவினரின் கண் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவரின் உறவினர்...
இலங்கையில், திங்கட்கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள நான்கு பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள், வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அகிம்சை இயக்கம் என்பவற்றின் தலைவர்களே, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்....
திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அடையாள அட்டைகளை...
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல் தலையீடு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
