- Monday
- May 18th, 2026
வானொலி சமிக்ஞைகள் மூலம் செயற்படும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகம் செய்யவிருப்பதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாகனங்களின் நடமாட்டத்தினை இலகுவாக பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியும் எனவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போலி...
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன் உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல்...
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்துக்கு நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கும்-நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையில் உள்ள நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத...
சிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இவர்கள் இருப்பதோடு, அதில் மூவர் தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது நலம் குறித்து விசாரணை செய்ய அனுராதபுரம் சிறைச்சாலைக்கு...
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான, 6 வட மாகாணசபை...
புதிய அரசியலமைப்பில், இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இலங்கை ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர், “ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற...
நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 13 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள்...
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்...
பேருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்துச் சபை அனுமதி தராவிடில் நாடு தழுவிய ரீதியில் பேருந்து உரிமையாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்...
ஆசிரியப்பணி மகத்தானது. அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியப்பணி அதிமகத்தானது. போர் சமூகக் கட்டுமானங்களைப் பாதித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பெற்றோர்களாகவும் அவதாரம் எடுக்க வேண்டியுள்ளது. தமது கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, பெற்றோர்களது கடமைகளையும் சேர்த்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மனப்பூர்வமாக இந்தப் புண்ணிய கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்ற ஆசிரியர்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படக் கூடியவர்கள்...
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...
வடக்கு மாகாணத்தில் 182 தொண்டர் ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண...
வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித்...
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும் என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வடமாகாண சபையின் நால்வரை கொண்ட குழு இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழுவில் தாம், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மேலும் இருவர் அடங்குவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமது குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று...
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என எடுத்து கூறினர். இதன் போது காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களையும்...
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார். அதில் குறித்த பெண், இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும்...
அபராதத் தொகையினை இணையத்தளம் மூலம் செலுத்தமுடியும் என்பதுடன், அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடம் கையளிக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னர் அபராத தொகையை செலுத்திய பின்னரே ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை காவல் நிலையங்களில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறை இருந்தது. எனினும் குறித்த நடைமுறை சாரதிகளுக்கு மிகவும் அசௌகரியம் என்பதனால் அதனை...
வவுனியாவில் ஆசிரியருக்கெதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்புரை செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுடைய இரு மாணவர்கள் அப் பாடசாலை ஆசிரியரை தகாத வார்த்தைகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகர் முழுவதும் நேற்று...
யாழ். பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஈ.எம்.யூ. விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமான இடத்துக்கே விஜித குணரத்ன இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றி வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு முதல்...
Loading posts...
All posts loaded
No more posts
