நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டங்கள் தொடரும்: சுரேஸ்

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் கௌவரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று உருவாக்கப்படும்வரை போராட்டங்கள் தொடர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தியாகி பொன்.சிவகுமாரனின் 44 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். உரும்பிராய் பிரதேசத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...

கேபிள் ரீவி இணைப்பு முகவர் கைது!

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் கேபிள் ரீவி இணைப்பு வயரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதிக்கு கேபிள் ரீவி இணைப்பை வழங்கும் முகவர் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். “கேபிள் ரீவி இணைப்பு வயரைத் தொடுத்திருந்த இரும்புக் கம்பியின் ஊடாகவே மின்சார சபையின் உயர் அழுத்த...
Ad Widget

‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’: யாழில் சுற்றாடல் தின நிகழ்வு

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டையை அண்மித்த பண்ணை கடற்கரை பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. வடமாகாண...

விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் தியாகியின் நினைவு!

விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை, அவரது சகோதரி சிவகுமாரி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது....

ஈபிடிபி தவராசாவால் மீளக் கோரப்பட்ட பாவப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவோம்! – நிதி சேகரிப்பில் இளைஞர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஈபிடிபி உறுப்பினர் தவராசா கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு விவாதமே நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தவராசாவின் பணத்தினை மீள வழங்கும் செயலில் தமிழ் இன உணர்வுள்ள...

மீள்குடியமர்ந்தோரிற்கான பதிவு நடவடிக்கைகளின் காலஎல்லை நீடிப்பு!

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய காலப்பகுதியே...

யாழில் காணியற்றவர்களைப் பளைப் பிரதேசத்தில் குடியேற்ற நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றும் திட்டமொன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) இணைத் தலைவர்கள் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் முன்மொழிந்ததுடன்,...

வலி. வடக்கில் மேலும் சில காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!

வலி. வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த பொது மக்களது காணிகள் சில நேற்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டன. வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் பளைவீமன்காமம் வடக்கில் உள்ள ஜே.236 கிராம சேவகர் பிரிவிலுள்ள 33 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய நிலையில்...

கேப்பாபுலவுக் காணி உரிமையாளர்களுடன் விசேட கூட்டம்!

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும்...

55 ஆயிரம் ரூபாய் நிதி போதாது 1 இலட்சம் வேண்டும்: மாவை சேனாதிராஜா

மீள்குடியேற்ற அமைச்சினால் மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 55 ஆயிரம் ரூபாய் நிதி போதாது எனவும் அதனை 1 இலட்சம் ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வட.மாகாண முதலமைச்சர்...

மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்க முடியாது: வடக்கு முதல்வர்

மாகாண சபைகளின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை எனவும் யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி உரிய நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான வடமகாண...

கிளிநொச்சி மாவட்டத்தில் 126 டெங்கு நோயாளிகள் – ஒருவர் பலி

தருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தாகவும் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகிறது....

ஐந்தாம் திக­திக்குள் அர­சாங்கம் தென்­ப­குதி மீன­வர்­களை வெளி­யேற்ற வேண்டும் – சுமந்திரன்

வட­ம­ராட்சி கிழக்கு, மரு­தங்­கேணி பகு­தியில் அத்­து­மீறி தங்கி மீன்­பி­டித்­தொ­ழிலில் ஈடு­பட்­டுள்ள சிங்­கள மீன­வர்­களை எதிர்­வரும் ஐந்தாம் திக­திக்குள் அர­சாங்கம் வெளி­யேற்­ற­ வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம் ஏ சுமந்­திரன் கோரிக்கை விடுத்­துள்ளார். மரு­தங்­கே­ணியில் தமிழ் மக்­க­ளிற்கு சொந்­த­மான நிலத்தில் நூற்­றுக்­க­ணக்­கான வாடி­களை அமைத்து பெரு­ம­ளவு சிங்­கள மீன­வர்கள் மீன்­பி­டித்­தொ­ழிலில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்....

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை...

பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்...

மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்

1974 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் 5 ஆம் திகதி (நாளை) உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தலில் சகல தமிழ் அரசியற் கட்சிகளினதும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளமை...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ்.பல்கலையில் கலந்துரையாடல்!

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெற்றது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம் ஆகியன இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தியது. அடையாளம் அமைப்பால் இது...

மானிப்பாயில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கி கொள்ளை!

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது. கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த...

யாழ்ப்பாணம் உள்பட 12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதி உச்சம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு...

வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்: அரசாங்க அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்...
Loading posts...

All posts loaded

No more posts