ஐந்தாம் திக­திக்குள் அர­சாங்கம் தென்­ப­குதி மீன­வர்­களை வெளி­யேற்ற வேண்டும் – சுமந்திரன்

வட­ம­ராட்சி கிழக்கு, மரு­தங்­கேணி பகு­தியில் அத்­து­மீறி தங்கி மீன்­பி­டித்­தொ­ழிலில் ஈடு­பட்­டுள்ள சிங்­கள மீன­வர்­களை எதிர்­வரும் ஐந்தாம் திக­திக்குள் அர­சாங்கம் வெளி­யேற்­ற­ வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம் ஏ சுமந்­திரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

மரு­தங்­கே­ணியில் தமிழ் மக்­க­ளிற்கு சொந்­த­மான நிலத்தில் நூற்­றுக்­க­ணக்­கான வாடி­களை அமைத்து பெரு­ம­ளவு சிங்­கள மீன­வர்கள் மீன்­பி­டித்­தொ­ழிலில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

இதன் கார­ண­மாக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்கள் அவர்­களை வெளி­யேற்­ற­வேண்டும் என வேண்­டுகோள் விடுத்து வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக தாங்கள் புல­னாய்வு பிரி­வி­னரின் கொலை மிரட்­ட­லிற்கு உள்ளாகி­யுள்­ள­தாக பொது­மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே சிங்­கள மீன­வர்­களை வெளி­யேற்­று­வது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று இடம்­பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்டு கருத்து தெரி­வித்­துள்ள சுமந்­திரன் தென்­ப­குதி மீன­வர்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்­ற­வேண்டும் என மத்­திய அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுக்­கப்­படும் என தெரி­வித்­துள்ளார்.

ஐந்தாம் திக­திக்குள் மத்­திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றால் ஆறாம் திகதி பாரிய போராட்டத்திற்கு மக்கள் தயாராகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts