வடக்கு – கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 9 பேருக்கு இடமாற்றம்

வடக்கு – கிழக்கில் 9 மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. “நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும்” என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஊர்காவற்றுறை மாவட்ட...

காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு திறந்துவைக்கப்பட்டது

காரைநகர் பிரதான வீதியில் வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு இன்று சமய வழிபாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது. காரைநகர் வரவேற்பு வளைவு திறப்புவிழா நிகழ்வு காரைநகர் பிரதேச சபையின் ஜக்கியதேசியக்கட்சி உறுப்பினரான சுந்தேரஸ்வரன் கிருஷ்ணவரதன் தலைமையில் இடம்பெற்றது. திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், சிறப்பு...
Ad Widget

யாழ். நகரில் கடலட்டைத் தொழிலை தடுக்க வலியுறுத்தி பேரணி!!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ்.மாவட்டத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்து அரச அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,தென்னிலங்கை மீனவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று...

கொக்குவிலில் வாள்வெட்டு நடத்திய கும்பலில் மூவர் சிக்கினர்!

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு, கவனிப்பின் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனைக்கோட்டை, ஆறுகால்மடப் பகுதியைச் சேர்ந்த ஆவா குழு இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் நேற்று முற்பகல் 11.30...

வடக்கில் அரைநாள் கடையடைப்பு அழைப்புக்கு ஒத்துழைப்பு இல்லை

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அரைநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான...

யாழில் இன்று கண்டன பேரணியும் கத­வ­டைப்பும்

யாழ்ப்­பாணம்,வட­ம­ராட்சி கிழக்கில் மேற்கொள்­ளப்­பட்டு வரும் சட்­ட­வி­ரோ­த­மான கட­லட்டை தொழில்முறையை உடன் நிறுத்தி அதில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்­றைய தினம் யாழில் கத­வ­டைப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. இச் சட்­ட­வி­ரோத தொழில் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்­றைய தினம் காலை 8.30 மணி­ய­ளவில் யாழ். மாவட்ட செய­ல­கத்தை நோக்கி மாபெரும் கண்­டனப் பேர­ணியும் இடம்­பெ­ற­வுள்­ளது. யாழ்.மாவட்ட கடற்றொழி­லாளர்...

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிச்சயம் க.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் – சுமந்திரன்

வடமாகாண சபையின் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிச்சயம் க.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க முடிவு செய்துள்ளீர்களா?என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த சுமந்திரன், கட்சியின் கொள்ளைகளை மறுதளித்து செயற்பட்ட...

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

6/2006 என்ற சுற்றறிக்கைக்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வழங்கியது. இருப்பினும் அதனை இதுவரையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை...

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால் உலக அரங்கில் தமிழினப்படுகொலை மூடிமறைக்கப்பட்டிருக்கும். -பொ.ஐங்கரநேசன்

அரசியல்வாதிகள் சிலர் முதலமைச்சர் மீதும், வடக்கு மாகாணசபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணசபை சரியாக இயங்கவில்லை என்றும், வந்த அபிவிருத்தித் திட்டங்களைத் திருப்பி அனுப்பியதைத் தவிர முதலமைச்சர் வேறு எதனையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள். உண்மையில், விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இல்லாது போயிருந்தால், அரசுக்குச் சாமரம் வீசும் தமிழ்த்தலைவர்கள் முதலமைச்சர்...

யாழ் போதனா வைத்தியசாலையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்குழந்தைக்கு இரண்டு நாட்களின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை!!

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் கூறப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை இரண்டு நாள்களின் பின் நேற்று தனியார் வைத்தியசாலையில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு தனியார் வைத்தியசாலையில்...

மானிப்பாயில் அடாவடி ஈடுபட்ட கும்பலில் மூவர் கைது

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த...

தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளனர் – மாவட்டச் செயலாளர்

தேர்தல் காலத்தில் தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்...

எரிபொருள் விலை திங்கள் முதல் குறைவடையும்: முக்கிய அறிவிப்பு

மண்ணெண்ணெய் விலை எதிர்வரும் தினங்களிற்குள் குறைவடையும் என கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 25 தொடக்கம் 30...

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

வட.மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கே மேற்படி நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க...

வடக்கில் கேபிள் தொலைக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்சார சபை

வடக்கு, கிழக்கில் சட்டரீதியாகக் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் தூண்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியும் என இலங்கை மின்சார சபை முடிவு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள், நடை முறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டண விடயங்களைத் தீர்மானித்து, இத்தகைய இணைப்புகளை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைக் மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார...

கொழும்பு தாமரை கோபுர பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இளைஞர் மரணம்!!

இரண்டாம் இணைப்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும் கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க சிறப்புக் குழு! : அங்கத்தவர்களை இணைக்க விண்ணப்பங்கோரல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார். இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 1706 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர். மேலும் இதன்போது சகல...

மீனவர் போராட்டத்தில் கூட்டமைப்பு, முன்னணியினர் இடையே வாய்த்தர்க்கம்!!

கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க, அதனை அவதானித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்தனர். இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைப் போராட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலில் ஈடுபடும்...

சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று இரவு 7 மணியளவில் மாற்றப்பட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். “சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, பொது மருத்துவ வல்லுநர்...
Loading posts...

All posts loaded

No more posts