Ad Widget

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

வட.மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கே மேற்படி நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்கு நிதியுதவியளிக்கும் நாடுகளில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுவதுடன், 2009ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts