Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது

இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 1706 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர்.

மேலும் இதன்போது சகல கற்கை நெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும் 48 பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts