- Sunday
- August 30th, 2026
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஏனைய இருவரும் தப்பி சென்றனர். இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும்...
தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6/2006 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வலுயுறுத்தி தபால் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கம்...
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும்...
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (வியாழக்கிழமை) கைதடியில் இருக்கும் முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு மாகாணங்களில் காணப்படும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 ஈழத் தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது....
அனைத்துப் பட்டதாரிகளையும் பாதிக்காத வகையில் அரச நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக தொழில் உரிமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நாடுமுழுவதுமுள்ள வேலையற்ற பட்டாரிகளில் 5000 பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதமும் அபிவிருத்தி உதவியாளர் நியமனம் வழங்க...
யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது...
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்....
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள்...
அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மற்றும் இனங்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை...
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றபோது, தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40...
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திரவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்....
போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கையாக தண்டப்...
மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருநாள் இடம்பெற்றது....
“பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பகுதியால் பாய்ந்த குண்டு இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்துள்ளது. மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சென்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்” இவ்வாறு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – கே.கே.எஸ்...
வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டமானது நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்...
மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்று இரவு (திங்கட்கிழமை) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மல்லாகம், குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனின் சடலமே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம்...
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மையில் நேற்றிரவு 7 மணியளவில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகப்...
வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,...
சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த அதனை மேற்கொள்பவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் வழங்கப்படும் கொடுமையான தண்டனைகளைப் போன்று நமது நாட்டிலும் தண்டனை கடுமையாக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான செயல்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும்...
Loading posts...
All posts loaded
No more posts
