- Sunday
- August 30th, 2026
யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும்...
மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது. இச் சம்பவம் அதிகாலை 1 மணியளவில் இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் நீரினை பீச்சி அடித்தாலும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கப்பலின் இயந்திர பகுதி...
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாய மாதா ஆலயம் முன்பாக நேற்று இரவு...
மல்லாகத்தில் இளைஞர் உயிரிழக்க காரணமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்னமும் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு முன்பாக நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் நேற்றிரவு வீதியை மறித்து...
மல்லாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தவே குறித்த...
திர்வரும் 20/06/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அபிவிருத்தி உதவியாளர் நியமனம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி உதவியாளருக்கான நேர்முகத்தேர்வை எதிர் கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்...
மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசெரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருத்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் , சோகமாக காணப்பட்டனர்.அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் மாலை இடம்பெற்றது. அதன் போது தேரில் அந்தோனியார் மற்றும் , குழந்தை...
முச்சக்கர வண்டிகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்க முடியும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான போக்குவரத்துத்து விதிமுறைகள் இந்தவாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. “இந்த ஆண்டின் முதல் 120 நாள்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்பற்ற சாரதியத்தால் 117 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சு கவனம்...
மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவரால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. ஆலயத்துக்கு வந்த இளைஞன், அவரை மீட்டு குழப்பத்தை தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் குழப்பத்தை தடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார். இவ்வாறு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். “குழப்பநிலை இருந்தது உண்மை....
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் குடும்பத்துக்கு முப்பது இலட்சம் ரூபா இழப்பீட்டை ஓப்பந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் (வயது – 19) என்ற இளைஞன் கடந்த 8ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16ஆவது மாடியில் மின் தூக்கி...
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை...
நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவதியாக குறிப்பிடப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் நேற்று இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர்...
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்” இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் இளைஞர்களின் நடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லையாயின் தனது கவனத்துக்கு கொண்டு...
தீவுப் பகுதியிலிருந்து இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் கும்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்த ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றக் கட்டளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அலுவலகருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தீவகத்தில்...
30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர், குடியிருப்பு பகுதிகள் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்பாசண திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்று நீர்பாசண...
போலி நியமனக் கடிதங்கள் மூலம் வட மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதத்தினை ஒத்த போலி நியமனக் கடிதங்களை தயாரித்து வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கான நூலக உதவியாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற பதவிகளுக்கே...
பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் வழித்தவறி தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த மீனவர்கள் கடலில் தளித்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடுத்து 26 மைல்களுக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில்...
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருக்கின்றார். இந்து விவகார பிரதி அமைச்சை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் எதிர்க்கும். அதில் மாற்றம் செய்யாவிடின் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான...
இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள்...
தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற...
Loading posts...
All posts loaded
No more posts
