வளிமண்டளவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த...

வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு தடைகள் வருகின்றது: சுவாமிநாதன்

வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு எதிர்ப்புக்களும் தடைகளும் வருவதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேநேரம், வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த தமது அமைச்சிடம் போதியளவு பணம்...
Ad Widget

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் தேவை அரசிற்கு இல்லை: ராஜித

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்தவிதத் தேவையும் கிடையாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதுதொடர்பில் நாம் ஆராயவேண்டும். இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டியத்...

மன்னார் நீதவான் கொழும்பிற்கு மாற்றம்! – காரணம் என்ன?

மன்னார் மாவட்ட நீதவானாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) அவர் கொழும்பில் தனது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென அறிவவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களில்,...

ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்!!!

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது. அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது) மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த இராஜேந்திர சிவகுமார் (Rajendra...

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ். மாணவரின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் சார்பில் அவரது தாயாருக்கு வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதனால் இன்று (புதன்கிழமை) குறித்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு...

கிளிநொச்சியில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் 60,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் இதுவரை 60,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்றைய நூற்றாண்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புக்கள் இணைந்து பேரணியொன்றை...

யாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அரச அதிகாரிகள்!!

மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும்...

வடக்கில் பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன: மாவை

வடக்கில் படையினரால் மட்டுமல்ல, பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, செவ்வாய்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு...

மணலாறு பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம்: கஜேந்திரகுமார்

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, நேற்று (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி...

முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய...

பாலியல் தொல்லை வழங்கிய வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை இன்று வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து வரும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, விடுப்பில் இருப்பதால் வழக்கு...

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்கின்றார் வடக்கு ஆளுநர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலையாக செயற்படுவதால், ஆளும் மற்றும் எதிர் தரப்பினரிடம் இருந்து பல்வேறு குற்றச் சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். பலாங்கொடயில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவத்தினரிடம் இருந்து ஆலயத்தை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை, இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தாருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ஆலய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 15 வருட காலத்திற்கு மேலாக குறித்த ஆலய பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஆலய சூழலில்...

நல்லூருக்கு சென்ற இளைஞனை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என அவரது தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும்...

வடக்கில் இராணுவ சின்னங்களை அகற்ற முடியாது என்கிறார் ருவான் விஜேவர்தன!

வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற...

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்து,...

அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலைப் பேசமாட்டோம்: சம்பந்தன்

எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts