பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெற்றோலிய ஊழியர்கள்...

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன. தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக் கூடுகளில் இதுவரை...
Ad Widget

புதிய அமைச்சரவை வெளியாகியது!

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில் ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர். வடிவேல் சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்...

மத்திய அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய விவகாரங்கள் அமைச்சராக இருந்த டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை...

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவரும் முன்வரவில்லை – ஜனாதிபதி

வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...

சுமந்திரனுக்கு வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ள காலம் கனிந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு...

டெலோவின் முக்கியஸ்தருக்கு ஆவா குழு எச்சரிக்கை!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் (28)...

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார். கடந்த 1945ஆம் ஆண்டு...

மாகாண சபை தேர்தலை நடத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பிலேயே அடுத்த எமது நடவடிக்கைகள் காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டில் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் தேர்தல்...

கிளிநொச்சியில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கல்!

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர் அந்தவகையில்...

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பு! மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி 55...

குடத்தனையில் கொலைவெறித் தாக்குதல்! ஒருவர் சாவு! மூவர் படுகாயம்!!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த நபர் தம்பதிகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி படுகாயமடைந்துள்ளார். பின்னர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின்...

யாழ்.சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை முயற்சி!

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குறித்த கைதி சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்பவரே தற்கொலை முற்சியில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைதி திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகத்தில்...

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: மாவை சேனாதிராசா

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில்...

நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழுத்தம்

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் இதன்மூலம் இலங்கை மக்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்ற இடமளிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நிலைமைகளை கரிசனையோடு உற்றுநோக்கிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்...

பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய...

மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் – நாளை புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள்...

மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் – சீ.வி.கே.சிவஞானம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர்...

எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்!!- சம்பந்தன்

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,...

மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவோம் – டக்ளஸ்

“நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது. மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து போரில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம்” இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்...
Loading posts...

All posts loaded

No more posts