- Wednesday
- May 13th, 2026
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த...
எரிபொருள் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 155 ரூபாவாக அமைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை...
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இழப்பீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்...
வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று...
வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்று உயர் கல்வி மற்றும் காலசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை விளக்க நேரத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கிளிநொச்சியை நோக்கிய இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள்...
போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டு வருட திட்டமொன்றை அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்தார். இத்திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா ($140,000) வழங்கப்பட்டுள்ளது....
இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்றைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட...
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்வி–மணலாற்றில் தொடங்கியசிங்களக் குடியேற்றம் மகாவலிஅதிகாரசபையால் தொடர்ந்துநடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகக்...
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா...
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மாகாணசபையால் இதுவரை 437 பிரேரணைகளும் 19 நியதிக்...
“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா?” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உண்ணாவிரத...
யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர்....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல –...
வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய...
கொக்குவில் பகுதி இன்றும் விசேட பொலிஸ் அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டு, வீடுகளுக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்வதாகவும், பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில்...
மட்டக்களப்பு கல்வியற்கல்லூரி மாணவனின் சடலம் கல்லூரி விடுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், கல்வியற்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக...
யாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் அவதானித்து அதனை சீர் செய்யுமாறு...
யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்று உள்ளது. குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டுள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
