- Monday
- May 11th, 2026
வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படுகிறதோ, அன்றே முழுமையான மகிழ்ச்சியடைவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, லக்கலையில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்- ”நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்து...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட்...
பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் அநாவசியமாக தலையீடு செய்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள்...
“இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம்தானே” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் உயர் நீதிமன்ற கேள்வி எழுப்பியது. யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்...
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் முதற்கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர்...
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு...
முதன் முறையாக தமிழர் ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவரை வட மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என எண்ண இயலாது என்றும் தமிழரின் பிரச்சனைகளைத் தீர்ப்பது...
வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த தர்மதாசன் செல்வநாயகம் (வயது 48) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த பகுதியிலுள்ள ஒருவர், கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் உள்ளதாக கூறப்பட்ட கனகராயன்குளத்திலுள்ள வீடொன்றிற்கு சென்ற பொலிஸார்,...
‘தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும், தமிழ் தலைமைகளின் வகிபாகமும்’ எனும் தொனிப்பொருளில் கருத்துக்களால் களமாடுவோம் எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில், வல்வெட்டித்துறை சிவன் கோயில்...
வவுனியா நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பெண்களுடன் அங்கிருக்கும் சில ஆண்கள், இரட்டை அர்த்த சொற்களை பிரயோகிக்கின்றமை, தகாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தது. இந்நிலையில், சில இளைஞர், யுவதிகள் இணைந்து இரகசிய கமராக்கள் சகிதம்...
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும் கண்டுகொள்வதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பொரளை பொது மயானத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் அவர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை...
வன்னி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இரண்டு ஈடுபட்டுள்ளன. போர் நிறைவடைந்து வரும் மே மாதம் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இனப் போரில் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை தந்துதவுமாறு அந்த அமைப்புக்கள் கேட்டுள்ளன. ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் மற்றும் மனித உரிமைகள்...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலாணி என்ற சிறுமி...
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது, தனியார் பேருந்து சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் இ.போ.ச. சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணியளவில் யாழ். ஆலடி சந்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வசாவிளான் பகுதியிலிருந்து யாழ். நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பேருந்தினை பின்னால் வந்த...
கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். “மகன் எமது சொல்லைக் கேட்பதில்லை. போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார். வீட்டில் இருந்து பொருள்களைத் திருடிச் சென்று விற்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்த போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார். க.பொ.த...
யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தினை மூவரடங்கிய கொள்ளைக்குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சூராவத்தை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்து சென்ற போது சூராவத்தை பகுதில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்திருந்த...
மன்னாரில் 225 ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வுப் பணிகளில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலநேற்று (திங்கட்கிழமை) 225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. மன்னார் –...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார். அத்தேர்தலில், 62 இலட்சத்து...
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் – பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னத்துரை சசிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த நபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல் வெட்டிக்கொண்டு இருந்த சமயம் மதிய நேரம்...
Loading posts...
All posts loaded
No more posts
