- Sunday
- May 10th, 2026
இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார். மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் சமீப காலமாக இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடக...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு...
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். நேற்று காலை முதல்...
ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். தென்னாசிய பிராந்தியத்தில்...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று (புதன்கிழமை) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டே ஆளுநரின் இந்த திடீர் கண்காணிப்பு...
மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார். தேசிய...
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...
காதல் விவகாரத்தால திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுசன் (21) என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். யுவதி ஒருவரை டானியல் என்ற இளைஞன் முன்னர் காதலித்ததாகவும், தற்போது அந்த யுவதியை கொல்லப்பட்ட தனுசன் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. காதலி ஏமாற்றிய கோபத்தில், தனுசனுடன், டானியல் அடிக்கடி முரண்பட்டுள்ளார். சித்திரை புதுவருட தினத்திலன்றும் இரண்டு இளைஞர்களிற்குமிடையில்...
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுடன் குறைந்தபட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நோயாளர்களுடன் நேரத்தை செலவிடுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளில் நீதி கிடைக்க வேண்டும், இலங்கை...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை பதினையாயிரம் ரூபாயினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக...
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம்...
யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன்...
மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துககு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது. வரணி இயற்றாளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மாணவன் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு இலக்காகி...
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. 18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை...
வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
திருகோணமலையில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்திய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் வாவியில்,...
இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் நேற்று (சனிக்கிழமை) இரவு 9.04 மணியளவில் இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்த இடங்களில் பதிவாகியுள்ளன. 5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் குறித்து இதுவரை வேறு எந்தவிதமான...
Loading posts...
All posts loaded
No more posts
