Ad Widget

வெட்டுக்காயங்களுடன் உதவிகோரி ஓடிய இளைஞன்!!! உதவ மறுத்த மக்கள்!!!

காதல் விவகாரத்தால திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுசன் (21) என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.

யுவதி ஒருவரை டானியல் என்ற இளைஞன் முன்னர் காதலித்ததாகவும், தற்போது அந்த யுவதியை கொல்லப்பட்ட தனுசன் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. காதலி ஏமாற்றிய கோபத்தில், தனுசனுடன், டானியல் அடிக்கடி முரண்பட்டுள்ளார்.

சித்திரை புதுவருட தினத்திலன்றும் இரண்டு இளைஞர்களிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றையதினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து தனுசன் சென்று கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் பின்பறமாக வந்த டானியல், தனுஸ்டனின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். வெட்டுக்காயங்களிற்கு உள்ளான தனுசன், உதவி கோரி நீண்ட தூரம் ஓடியுள்ளார். அங்குள்ள சிசிரிவி கமராவில் அந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

தரப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறி, வைத்தியசாலைக்கு செல்ல உதவி கோரியுள்ளார். எனினும், சாரதி முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி விடுகிறார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற சில இளைஞர்களும் அவருக்கு உதவாமல் சென்றுள்ளனர்.

அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால், காப்பாற்றியிருக்கலாமென்ற ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

Related Posts