- Sunday
- May 10th, 2026
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தங்களை பின்பற்றி மேலும் பலர் தாக்குதல்களை மேற்கொள்ளமுன்வருவார்கள் என எதிர்பார்த்திருக்ககூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கார்டியனிற்கு தெரிவித்துள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஏன் பெருமளவு வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டு சென்றார்கள் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார் மேலும் பலர் தங்களை பின்பற்றி தாக்குதலை...
இந்திய வானிலை அவதான நிலையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு...
துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை...
இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 7.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் உள்ள வொலிவேரியன் என்னும் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது குண்டுத் தாக்குதல் மற்றும்...
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்.திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, பலாலி வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மது போதையில்...
ஒரு தொகை வெடி பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.
பாடசாலைகள் இ பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி திங்கட்கிழமை திறக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: தேசிய பாதுகாப்பு சபை கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள்...
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பரப்புரைகளினால் கொட்டாஞ்சேனை பொது...
கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்கிடமான...
படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார். ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...
இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும், அதனை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதென்றும்...
சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்புவோரை அடையாளப்படுத்த முடியாவிட்டால் சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். தவறான விடயங்களை பரப்புவோரை அடையாளப்படுத்த, சமூக ஊடகங்கள் சார்ந்தவர்கள் உதவ முன்வராவிட்டால் இந்நடவடிக்கையை எடுக்க நேரிடும் என...
தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குமான நினைவேந்தலும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டோர், தந்தை செல்வாவின் சதுக்கத்திலுள்ள சமாதிக்கு மேல், மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தீவிரவாத...
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹரான் ஹாசிம் என்ற மௌலவி இறந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஷங்ரிலா நட்சத்திர விடுதி தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு...
மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் யாழ். மேயர் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. அத்துடன்வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. Security Alert: U.S....
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் – பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று...
கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும்...
Loading posts...
All posts loaded
No more posts
