- Sunday
- May 10th, 2026
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 8.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.9 E இற்கும் அருகில் மட்டக்களப்பிற்குக் கிழக்காக ஏறத்தாழ 580 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...
நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருப்திக்கொள்ள முடியவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இடம்பெற்றுள்ள இந்த அசாதாரண நிலைமைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பேராயர் இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போது எதிரிகள்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்நுழையலாம் என்ற...
இலங்கையில் கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், சிரியாவின் பகோஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்டாடி இதனை காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். சுமார் 5 வருடங்களின் பின்னர் அவர் தோன்றும் முதலாவது காணொளி ஒன்று...
யாழ்ப்பாணம் அல்லைப் பிட்டியில் மதஸ்தலம் ஒன்றில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று காவற்துறை விசேட அதிடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டன. இதுதொடர்பில் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், மன்னார் எரிக்கலம்பிட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்...
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது. உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும். உங்கள் வர்த்தக ஸ்தாபனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சகல விபரங்களும் பேணப்பட...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த...
இன்றைய தினம் நாட்டில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக ஸ்தம்பித்து இருந்த அலுவலகங்களில் இன்று வழமைப் போல் பணிகள் இடம்பெற்றன. நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச திணைக்களங்கள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இன்றை தினத்தில் இருந்து...
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் புதிய கணக்காய்வாளர் நாயகம், சட்டமா அதிபர், பதில் சட்டமா அதிபர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. புதிய கணக்காய்வாளர் நாயகமாக சுலந்த விக்ரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். இதேவேளை, சட்டமா அதிபர் ஜயந்த...
வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்....
ரயில்களில் பொதிகளை எடுத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி அனுர பிரேம ரத்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ரயில் நிலையங்களில் உட்பிரவேசிக்கும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதே போன்று ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்களும் பரிசோதிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிலைமை திருப்திகரமாக இருந்தால் மாத்திரமே பயணிகள் ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதே போன்று...
கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்புக்குகிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்முனை- சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட குழுவினருக்கும் அங்கிருந்த குழுவொன்றுக்கும் தொடர்பு இருப்பது கண்டுடிபிக்கப்பட்டது. சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை குண்டுதயாரிக்கப் பயன்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐ.எஸ். பனர்கள், கொடிகள்...
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வீட்டுக்குள் அமைக்கப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவவும் தேடுதல் நடத்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர். அதன் போது அப்பகுதியில்...
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (underground ) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர். இந்தத் தேடுதலின் போதே வீடொன்றுக்குள்...
தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான...
நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில், உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்று, இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத்...
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும்...
கல்முனையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!! இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் காயத்துடன் தப்பி ஓட்டம்!!
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது...
Loading posts...
All posts loaded
No more posts
