- Sunday
- May 10th, 2026
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சவாலுக்குட்படுத்த நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவசரகால சட்டம் நடைமுறை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட...
ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும்...
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையோர் இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஏனைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சிய சிலரே இன்னமும்...
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,...
சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். சாவகச்சேரி காவல நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி காவல நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே கிராம சேவையாளர்களிடம் காவல்துறையினர் குடும்ப...
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது அவர் சுற்றுலா சென்றமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்றும் அவர் சாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை)...
மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மது போதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த...
சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்திலும் ஊடுருவலாம் என அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளது. இதுதொடர்பில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் இலக்கங்களுடனான விவரம் வவுனியா பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லொறி ஒன்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டி உள்பட 19 வாகனங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. திருகோணமலை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வாள்கள், துப்பாக்கி ரவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இதுவரை அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜமாலியா மற்றும் மட்கோ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான ஆயுதங்கள்...
யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில்...
நேற்றையதினம் (01.05.2019) புதன்கிழமை காலை 10. மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்க பொது அறையில் இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு ஆகியன இணைந்த யாழ்மாவட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பொது...
அனலை தீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டியிகை உடினடியாக கையளிக்குமாறு புதிதாக பதவியேற்ற பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் பணித்துள்ளார். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சினால் யாழ் மாவட்டத்திலுள்ள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கான புதிய அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த அம்புலன்ஸ் வண்டிகளில் அனலை தீவு வைத்தியசாலைக்குக்கும் அம்புலன்ஸ்...
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடாபுபட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள் பற்றிய விபரங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர். எட்டு இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும், விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தக் குண்டுதாரிகளுக்கும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுவோருக்கும் பெருந்தொகை சொத்துக்கள் இருந்ததாக...
முன்னாள் போராளிகளை இராணுவத்தரப்பு உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தரப்பினருக்கும் இடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பை மேற்கோள் காட்டியே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே...
வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு பொதுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கு மாகாணத்தில் 339...
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா...
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு...
யாழில் இராணுவ சோதனை நடவடிக்கைகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளியாக பதிவுசெய்த யாழ்.மாநகர சபை உறுப்பினரை இராணுவத்தினர் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர், சோதனை நடவடிக்கைகளை...
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனுடன், மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பதிவை கொண்ட PX 2399 என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட லொறியே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த தடை நீக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருதி சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம்...
Loading posts...
All posts loaded
No more posts
