பல்கலை மாணவர் கைது பிழையானது: வடக்கில் அரச நிருவாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு பொறிமுறை அவசியம்- அமைச்சர் மனோ

பாதுகாப்பு சோதனை என பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாக பகிரப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி, மாணவ தலைவர்களை கைது செய்வது அதிகபிரசங்கித்தனம். எந்த நாட்டிலும் பல்கலைகழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாக கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்....

யாழ்.பல்கலை. சிற்றுண்டிச் சாலை நடத்துபவருக்கும் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்...
Ad Widget

வடக்கிற்குள் குண்டுகளுடன் வாகனங்கள் – பீதியடைய வேண்டாம் என்கிறது இராணுவம்

வெடிபொருள்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருள்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் பதிவு இலக்கங்கள்...

மொனறாகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி கைது!

மொனறாகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும்போது, அவரிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றையும் ஒரு இலட்சத்து இருபத்தோராயிரத்து அறுநூறு ரூபாய் பணமும் மீட்கப்பட்டதாக மொனறாகலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கப் ரக வாகனமொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்...

யாழ்.நகாில் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லிம் வா்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல்!!

யாழ்.நகாில் உள்ள ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை!!! – பரபரப்பு தகவல் வெளியானது

ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர...

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு எதிரான வழக்கை திங்களன்று விசாரணைக்கு எடுக்க சட்டத்தரணிகள் தீர்மானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து சமர்ப்பணங்கள் செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உரிய அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்...

தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவரும் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...

யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில்...

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்! – சஹரானின் மனைவி வாக்குமூலம்!

தனது கணவன் மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என அடிக்கடி கூறுவதாக குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவர் தற்கொலை தாக்குதலை நடத்துவாறென தனக்கு தெரிந்திருக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாய்ந்தமருதில் கடந்த மாதம் 26ஆம் திகதி படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சமரின்போது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில்...

பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை!!

பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு... உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நிலவும் நெருக்கடி நிலை தொடர்பாக..

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல்கலைக்கழக இயல்பு நிலையை குழப்புவதாக குற்றம் சாட்டி, நிலவி வரும் முரண்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் -பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு கேட்டும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் - அவர்களை அச்சுறுத்தி செயற்படுவதை கண்டிதும்,...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது; அடுத்த கட்ட நடவடிக்கையில் சுமந்திரன்

யாழ்.பல்கலைக்கழக வளாககத்துக்குள் இராணுவத்தினர் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிரு;தனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தங்கியிருந்த விடுதிகளில் தமிழீழத்தின் வரைபடம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு...

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் படுகொலை!!

வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவர் மீது, வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவர் மீது கடந்த சில...

மருத்துவ பீடத்தில் ஜொனி மிதிவெடி, கிளைமோர் மீட்பு!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம்” என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப்...

யாழ்.பல்கலை. மாணவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்....

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது – மாணவர்கள் மத்தியில் பதற்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள்...

யாழ்.பல்கலை சுற்றிவளைப்பு: மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் விசாரணையில் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகள் படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதையடுத்தே அவர்கள் இருவரும்...

யாழ்.நகரில் வாள்களைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட அரசியல்வாதியின் சகோதரர் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர்...

சித்தன்கேணியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல்!!

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணியில் வீடொன்றில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகத்தில் அங்கு அகழ்வுப் பணிகளை பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்தனர். புத்தளத்தில் வீட்டு உரிமையாளர் உள்ளார் என்றும் அங்கு புத்தளத்தில் உள்ள சிலர் வந்து சென்றதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், ஆயுதங்கள் புதைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து...
Loading posts...

All posts loaded

No more posts