Ad Widget

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது; அடுத்த கட்ட நடவடிக்கையில் சுமந்திரன்

யாழ்.பல்கலைக்கழக வளாககத்துக்குள் இராணுவத்தினர் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிரு;தனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தங்கியிருந்த விடுதிகளில் தமிழீழத்தின் வரைபடம் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர், பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும்,  மாணவர்களின் கைது தொடர்பாக விசாரித்தமையுடன், கோப்பாய் பொலீஸ்நிலையத்துக்குச் சென்று கைதுசெய்யப்பட்ட மாணவர்களைப் பார்வையிட்டமையுடன், தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுப்பர் என்று உறுதி தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசாவும் மாணவர்களை பொலீஸ் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

Related Posts