கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த தடை நீக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருதி சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
உயிர்ந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு தவறான செய்திகள் பகிரப்படுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் , வைஃபர் மற்றும் வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை கடந்த 21ம் திகதி பிற்பகல் முதல் தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.