இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தங்களை பின்பற்றி மேலும் பலர் தாக்குதல்களை மேற்கொள்ளமுன்வருவார்கள் என எதிர்பார்த்திருக்ககூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஏன் பெருமளவு வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டு சென்றார்கள் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
மேலும் பலர் தங்களை பின்பற்றி தாக்குதலை மேற்கொள்ள முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தார்களா என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேலும் பல முஸ்லீம்களை தாக்குதல்களை மேற்கொள்ள தூண்டும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் அவ்வாறு இரண்டாவது சுற்று தாக்குதல்களை மேற்கொள்பவர்களிற்கு வெடிமருந்துகள் அவசியம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசாரணையாளர்கள் 140 ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் இனம் கண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள பிரதமர் இவர்களில் அரைவாசி;க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சிலர் தப்பியோடியவண்ணமுள்ளனர் இவர்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் திறமையுள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய மேலும் பலரை ஈர்க்கும் முயற்சிகள் இடம்பெறலாம் எனகருதுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
வெடிபொருட்களை பயன்படுத்துவது குறித்த பாரிய திட்டமொன்று உள்ளது என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் யாரை கொண்டுவரப்போகின்றார்கள் என்பதே கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.